பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 15 இராத்தல் அரிசிக்குப் பதிலாக வேறு பொருள்களுமே கொடுக்கப்பெற்றன. நபர் 1-க்குக் காய்கறிகள் மாதத்திற்கு 15 கிராம் மட்டும் கிடைத்து வந்ததாம் ! கம்யூன்களில் வேலை செய்த உழைப்பாளிகள் பலர் வேலையின் நடுவே செத்து விழுந்தார்களாம்!

உடை விஷயம் உணவைக் காட்டிலும் மோசமாயிருந்தது. ஒரு நபருக்கு ஒர் ஆண்டுக்கு ஒரு கஜம் துணி வீதம் கூடக் கிடைக்கவில்லை. 2.6 அடி வீதமே கிடைத்தது! இந்தத் துணியைக் கொண்டு முகம் மட்டும் துடைத்துக் கொள்ளலாம் என்று ஷாங்கையிலிருந்த இந்தியர் ஒருவர் எழுதியுள்ளார் !

கொலைகளும், அடக்கு முறைகளும்

செடி கொடிகள், விலங்குகள் உயிர் வாழ்வதற்குக் காற்றும், கதிரொளியும், நீரும், உணவும் இருந்தால் போதும்; ஆனால் மனிதன் வாழ்வதற்கு இவற்றாேடு சுதந்தரமும் இன்றியமையாதது. சுதந்தரமில்லாத மனிதன் வாழவோ, வளரவோ முடியாது. அவன் தன் ஆற்றல்களைப் பூரணமாக வளர்த்துக் கொள்ள முடியாது. தன் மனப் போக்குக்கு இசைந்த முறையில் உற்பத்தியில் ஈடுபடவும் முடியாது. பலாத்காரத்தால் மனிதனை ஒர் இயந்திரம் போலவே பயன்படுத்திக்கொள்ள முடியும். சீனாவில் பெரும்பாலான மக்கள் இத்தகைய இயந்திரங்களாக வெற்றிகரமாக மாற்றப்பட் டிருக்கின்றனர்.

எந்தச் சர்வாதிகாரியின் ஆட்சியிலும் நடக்காத அளவு கொலைகளும், கொடுமைகளும் சீனச் சர்வாதிகாரி மாஸே-துங்கின் ஆட்சியில் நடந்திருக்கின்றன. மக்களைக் கொலை செய்து மண்டை ஒடுகளை மலை மலையாகக் குவித்து வேடிக்கை பார்த்த தைமூர் காலத்திலிருந்து, இலட்சக் கணக்கான யூதர்களையும்

159