பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் அது இடைவிடாமல் பிரசாரம் செய்கின்றது. பிறநாட்டு மக்களுடனும், அரசாங்கங்களுடனும் தொடர்புகொள்ள அது கையாண்டு வரும் முறைகள் நான்கு. தனிமனிதர்களுடன் நேரடியான தொடர்பு, வர்த்தகம், பிரசாரம், அரசியல் மூலம் ஊடுருவல் ஆகிய அம்முறைகளை அது திறமையுடன் கையாளுவதுடன், அவற்றிற்காகக் கோடிக்கணக்கான பொருளையும் செலவழித்து வருகின்றது.

வெளிநாடுகளிலிருந்து அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், படிப்பாளிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் முதலியோர்களைக் கொண்ட குழுவினர்கள் அடிக்கடி சீனாவுக்கு வரவழைக்கப் பெறுகிறார்கள். அவர்களுடைய செலவுகள்யாவும் சீன சர்க்காரைச் சேர்ந்தவை. அவர்களுக்கு உயர்ந்த முறையில் வரவேற்பும் வசதிகளும் செய்யப்பெறுகின்றன. சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் வெற்றிகளைக் காணக்கூடிய இடங்களுக்கும், புகழ்பெற்ற நகரங்களுக்கும், இனிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்களுக்கும் அவர்களைக் கம்யூனிஸ்ட் வழிகாட்டிகள் அழைத்துச் செல்கிறார்கள். முதன்மையான கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவர்களை நேரில் கண்டு வரவேற்று மகிழ்விக்கின்றனர்.

வெளிநாட்டு விருந்தினர்கள் புராதனத் தலைநகரான பீகிங்கைக் கண்டே பெரு வியப்படைகின்றனர். அடிக்கடி அங்கு கம்யூனிஸ்ட் இளைஞர்களுடைய விளையாட்டுக்களோ, ஊர்வலங்களோ, பொதுக் கூட்டங்களோ, தேசியக் கொண்டாட்டங்களோ நடப்பதில் பல்லாயிரம் மக்கள் பங்கு கொள்வதை அவர்கள் கண்டு பரவசமாகின்றனர். பதினான்கு மைல்கள் சுற்றளவும் கோட்டைச் சுவருமுள்ள பீகிங் நகர், சக்கர வர்த்திகளின் அரண்மனைகள், ஆலயங்கள், அழகிய

167