பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 எந்தக் காலத்தில், எந்த நாட்டிலிருந்து இப்படி இலவச யாத்திரைக்கு அன்பர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென்று சீன அரசாங்கம் அவ்வப்போது திட்டமிட்டுக் கொள்கின்றது. சீனாவிலிருந்தும் வெளி நாடுகளுக்குப் பல குழுவினர் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். 1959-இல் 5,000 சீனர்கள் 45 நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனராம்.

வர்த்தகத் தொடர்பு

பொருளாதார முறையிலும் சீனா பல நாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றது. நாட்டில் உற்பத்தியாகும் விளைபொருள்களையும் ஆலைப்பொருள்களையும் ஏற்றுமதி செய்வதில் அது மிகவும் அக்கறை காட்டிவருகின்றது.1956-லிருந்து அதன் ஏற்றுமதி உலகை அளாவியதாக விரிந்து வருகின்றது. தென்கிழக்கு ஆசியநாடுகள் சீனப் பொருள்களுக்கு ஏற்ற சந்தைகளாகி வருகின்றன. முன்பு அவைகள் ஜப்பானியப் பொருள்களே இறக்குமதி செய்து வந்தவை. அந்த வாணிபத்தை இப்போது சீனா கைப்பற்றியுள்ளது. பர்மா, மலாய் முதலிய நாடுகளுக்கும் சீனப்பொருள்கள் ஏராளமாகச் செல்கின்றன. மத்தியக் கிழக்கு நாடுகளிலும், தென் ஆப்பிரிகாவிலும் அப்பொருள்களுக்கு ஏற்ற இடங்கள் கிடைத்திருக்கின்றன. அமெரிக்காவை அடுத்துள்ள கியூபா தீவிலிருந்து ஆண்டுதோறும் ஐந்து லட்சம் டன் சீனி வாங்கிக் கொள்ளவும், அதற்குரிய விலையில் 100-க்கு 80 பங்கைச் சீனப் பொருள்களாக அனுப்பவும் 1961-இல் சீனா அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றது.

சாமான்களை ஏராளமாக அனுப்புவதில், சீனா மற்ற நாடுகளின் விலைகளைவிடக் குறைத்தும் விற்கிறது

169