பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வகுத்து அலை அலையாக வெள்ளம்போல் பாயும்படி அனுப்புவதும் தரைப் படைக்குப் போதிய முறைகள் என்று கருதப்படுகின்றன. புதிய ஆயுதங்களில் பயிற்சி பெறவும், இராணுவ இயந்திர சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவுமே வெளியார் உதவி தேவைப்படுகின்றது.

கம்யூனிஸ்ட் சீனாவில் எந்த நேரத்திலும் போருக்குத் தயாராயுள்ள நவீன ரஷ்ய ஆயுதங்களைத் தாங்கிய படையினர் 25 லட்சம் பேர்கள் இருக்கின்றனர். 4,000 போர் விமானங்கள் இருக்கின்றன. விமானப் பயிற்சி பெற்ற 75,000 பேர்களும் இருக்கின்றனர். கடற்படையில் பயிற்சி பெற்றவர்கள் 66,000 பேர்கள் இருக்கின்றனர். இராணுவத்திற்குத் தேவையான பயிற்சியும். தக்க வயதும் பெற்றவர்கள் 1, 25,00,000 பேர்களும், பின்னணியில் பயிற்சி பெற்ற 3,00,00,000 பேர்களும் உள்ளனர். சீன ராணுவ வலிமை பற்றி அமெரிக்க நிபுணர்கள் இவ்வாறு கணக்கிட்டுக் கூறுகின்றனர்.

சீனாவின் கப்பற் படையிலுள்ள கப்பல்கள் முக்கியமாக ரஷ்யாவிடம் வாங்கியவை. நீர்மூழ்கிக் கப்பல்கள் யாவும் ரஷ்யாவில் தயாரானவையே. கப்பல் கட்டும் தொழில் சீனாவில் ஆரம்ப நிலையிலேதான் இருக்கின்றது. எனவே அமெரிக்கா, பிரிட்டன், ரஷ் யாவைப் போலச் சீனக் கப்பற்படை சமீப எதிர்காலத்தில் வளர்ச்சிபெற முடியாது.

சீனாவின் விமானப்படை உலகின் நான்காவது பெரிய படையாகக் கருதப்படுகின்றது.

கொரியா, இந்தோசீன முதலிய இடங்களில் சீனப் படைகள் போரிட்டதில் பல வெற்றிகள் பெற்றன. எனினும் சிப்பாய்கள் படையை விட்டு ஒடி விடுவதும், எதிரியிடம் சரணடைவதும் காணப்

173