பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒர் ஆற்றைக் கடந்து வரும்போது, ஸியாங் பிரபு விடம் அவருடைய அதிகாரி ஒருவர், அப்போதே ஆற்றின் நடுவிலுள்ள அப்படைகளே அழித்துவிடலாம் என்று கூறினார். ஆனால் பிரபு அதற்குச் சம்மதிக்க வில்லை. ஆற்றினுள் சிதறி நிற்கும் படைகளை வதைப்பது கனவானுக்கு ஏற்றதன்று என்று அந்த யோசனையை மறுத்துவிட்டார். எதிர்ப்படைகள் கரையேறியதும், அதிகாரி, அப்படைகள் ஆயத்தமாவதற்கு முன் தாக்குதல் நலமென்று கோரினர். எதிரிகள் அணி வகுத்து நிற்பதற்குள் தாக்குதல் கனவானுக்கு ஏற்றதன்று என்று பிரபு மீண்டும் மறுத்துவிட்டார். எதிர்ப் படைகள் பிரபுவின் படைகளைவிட மிக அதிகமாயிருந்தன. கடும் போர் நடந்தது. ஸியாங் குங் படுதோல்வி யடைந்ததுடன், உடலில் காயங்களும் பெற்றார். ஆயினும் தாம் தர்மத்தைக் கைவிடவில்லை என்று அவர் திருப்தியடைந்திருப்பார். 2, 600 ஆண்டுகட்கு முன்பு இருந்த இந்த ஸியாங் குங் பிரபுவைக் கம்யூனிஸ்டுகள் பின்பற்றக் கூடாது என்று மாஸே-துங் எச்சரித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது : ‘நாம் ஸுங் நாட்டு லியாங் பிரபு அல்லர் போரில் நன்மை, நியாயம், ஒழுக்கம் முதலிய அவருடைய முட்டாள்தனமான கொள்கைகள் நமக்குப் பயனற்றவை.’ இராமாயணத்திலே, ‘இன்று போய், நாளே வா !’ என்று கோசல மன்னன் இராவணனுக்குக் கூறியதை இந்தியர் இன்றும் போற்றுகின்றனர். பாரதத்தில், ‘ஐந்து ஊர் வேண்டு; அவை இல்லையெனில், ஐந்து இல்லம் வேண்டு; அவையும் இல்லையெனில் அடுபோர் வேண்டு!’ என்று தர்மபுத்திரர் சொல்லியனுப்பியதில் பொறுமையின் ஆழத்தையும் எல்லையையும் காண்கிறாேம். இவையெல்லாம் சீன ஞானி மாஸே-துங்கின் நவீன சித்தாந்தப் படி முட்டாள்தனமான கொள்கைகள்! பொய், புலை,

176