பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஏசித் தாக்கி வந்ததற்கு அளவேயில்லை. ஆனால் குருஷ் சேவ் டிட்டோவுடன் சமாதானம் செய்து கொண்டு, அவரை 1963 தொடக்கத்தில் ரஷ்யாவுக்கு அழைத்து, விசேட மரியாதைகள் செய்தார். சீனா மட்டும் இன்னும் டிட்டோவையும், அவர் நாட்டையும் தாக்கிப் பேசுவதை நிறுத்தவில்லை. மற்றாெரு சிறு கம்யூனிஸ்ட் நாடான அல்பேனியாவைச் சீனா தாங்கிப் பிடித்து மடியில் வைத்துக் கொஞ்சுகின்றது. குருஷ்சேவ் அல்பேனியா என்ற பெயரைக் கேட்டாலே சீறிப் பாய்ந்து வந்தார்.

இவ்வாறு கொள்கையிலும் கருத்திலும் வேற்றுமைகள் பல இருக்கின்றன. நாடுகளின் வல்லமையைப் பொறுத்து அவைகளின் கொள்கைகள் நிலைக்கலாம், அல்லது விழலாம். ஸ்டாலினுக்குப் பின்னால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்க்கிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே முனைப்பாக நின்றது. ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே கூடச் சீனருக்கு ஆதரவாளர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ரஷ்யத் தலைவர் குருஷ்சேவ் தம் நாட்டில் தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதிலும், கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகளை இணைத்து இழுத்துக்கொண்டு போவதிலும், மேற்கு ஜெர்மனி முதலிய மேலைநாடுகளுடன் பொருதுவதிலும் தமது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் அவரே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடவும் வேண்டியிருந்தது. ஸ்டாலினுக்குப் பின் உலகக் கம்யூனிஸ்ட் தலைவராக அதிகாரத்தோடு விளங்குபவர் மாஸே–துங்கே என்று பலரும் அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் மா-ஸ்டாலினைப் போல் இல்லை. ‘சீன லெனின்’ என்றே அவரைச் சீனக் கம்யூனிஸ்டுகள் குறிப்பிடுகின்றனர்.

192