பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யும், புதிய காவல் நிலையங்கள் அமைத்துக் கொண்டிருப்பதையும் கண்டித்து, மேற்கொண்டு ஆக்கிரமிப்பு வேலைகளை நிறுத்திக் கொள்ளும்படி இந்திய அரசாங்கம் சீன சர்க்காருக்குத் தெரிவித்துக் கொண்டது. ஆயினும் 1962-லும் ஆக்கிரமிப்புக்கள் குறையவில்லை. சிப்சாப் பகுதியில் சீனப்படை காவல் புரியத் தொடங்கியது. ஸ்சம்டோ, ஸ்பாங்கூர் ஆகியவைகளுக்கு அருகில் புதிய காவல் நிலையங்களும் அமைக்கப்பெற்றன.

1949-இல் கம்யூனிஸ்ட் சீன அரசாங்கம் ஏற்பட்டதிலிருந்து 1954 வரை இந்தியாவுக்கும் தனக்கும் உள்ள எல்லைகளில் எந்தப் பகுதியைப் பற்றியும் எவ்விதப் பிரச்சனையையும் எழுப்பவில்லை. 1954, ஏப்ரல் 29-ந்தேதி திபேத்து சம்பந்தமான வர்த்தகப் போக்குவரத்து விஷயங்கள் பற்றி இந்தியா சீனவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்தச் சமயத்திலோ, அதற்கு முன்பு அத்தகைய ஒப்பந்தம் செய்து கொள்வது பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடத்தும் பொழுதோ, சீன எல்லைப் பிரச்சனை எதையும் எழுப்பவில்லை. ஆனால் அந்த ஆண்டு, ஜூலை 17-ந்தேதி நமது உத்தரப்பிரதேச ராஜ்யத்திலுள்ள பாரா ஹோத்தி என்ற இடத்தில் நம் துருப்புக்கள் இருப்பது பற்றிச் சீன சர்க்கார் இந்திய அரசாங்கத்திற்கு ஆட்சேபம் தெரிவித்தது. பாரா ஹோத் தி சீன எல்லைக்குள் இருந்தது என்பது அதன் கூற்று. இந்திய எல்லைக்குள் தனக்கு உரியது என்று ஒரிடம் பற்றிச் சீன உரிமை கொண்டாடியது இதுவே முதல் தடவை. ஆயினும் முன்னதாகவே சீன தயாரித்திருந்த தேசப் படங்களில் இந்திய வடமேற்கு எல்லைக்குள் லடாக்கில் 15,000 சதுரமைல் பிரதேசமும், வடகிழக்கு எல்லைக்குள் 36,000 சதுரமைல் பிரதேசமும் தன்னுடையவை என்று காட்டியிருந்தது.

18