பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 புகன்று பரீட்சைகளில் வெற்றி பெற்றார். பதினாறு வயது வரையில் அவர் இவ்வாறு நூற்றுக்கணக்கான பெளத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தார். மேலும் சில ஆண்டுகள் கழிந்து அவர் பட்டத்தை ஏற்றுக்கொள்ளும்முன், கம்யூனிஸ்ட் சீன திபேத்தின்மீது படையெடுத்து விட்டது படையெடுப்பின் காரணமாக அவர் உடனேயே தலாய் லாமாப் பதவியை வகிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அரசியல்

தலாய் லாமாவுக்கு இரு பிரதம மந்திரிகளும், மந்திரி சபையில் நான்கு அங்கத்தினர்களும் இருந்தார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக அரசாங்கத் தலைமைக் காரியாலயத்தில் சமய விஷயங்களைக் கவனிப்பதற்கு ஒரு தனி இலாகாவும், பொருளாதார அரசியல் விஷயங்களைக் கவனிப்பதற்கு ஒர் இலாகாவும் இருந்து வந்தன. அவசியமான இடங்களிலெல்லாம் லாமாக்கள் பதவி வகித்தனர். உதாரணமாகப் பிரதம மந்திரி ஒரு லாமா; மந்திரி சபையிலும் ஒருவர் லாமாவாயிருந்தார். எல்லா விஷயங்களிலும் தலாய் லாமாவுக்கே முழு அதிகாரம் உண்டு. பெயரளவுக்கே ஒர் இராணுவப்படை இருந்து வந்தது. நாட்டின் எல்லைகளில் அந்நியர்கள் வருவதைக் கண்காணிப்பதும், உள்நாட்டில் போலீஸ் வேலைகளைச் செய்வதும், சமய சம்பந்தமான ஊர்வலங்களில் முன்னால் அணி வகுத்துச் செல்வதுமே இராணுவ வீரர்களின் முக்கியமான வேலைகள்.

நாட்டின் பொருளாதார அமைப்பு பழங்காலத்திய நிலப்பிரபுத்துவ முறையில் இருந்தது. செல்வம் மிகுந்த பண்ணையார் அல்லது பிரபுக்களிடம் குடியான

210