பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கட்டடங்களுக்கு அடியில் பூமிக்குள்ளும் பல அறைகள் உள்ளன. பெளத்த மடாலயங்கள், விகாரைகள், இராணுவம் முதலியவற்றிற்கு அனுப்புவதற்கான வெண்ணெய், தேயிலை, துணிகள், உணவுப் பொருள்கள் பலவும் அவைகளில் சேமித்து வைக்கப் பெறுகின்றன. அவைகளின் கிழக்கு அற்றத்தில் ஒரு சிறைச்சாலையும் உண்டு. நான்கு எல்லைகளிலும் இராணுவ வீரர் பாதுகாத்து நிற்கக் காவல் நிலையங்களும் இருக்கின்றன.

பொட்டாலாவுக்கு இரண்டு மைல்களுக்கு அப்பால் தலாய் லாமா கோடைக் காலத்தில் வசிக்கும் அரண்மனையான கர்புலிங்கா அமைந்துள்ளது. பொட்டாலா எவ்வளவு பெரிதாயிருப்பினும், அதனுள்ளே பல மண்டபங்களிலும் அறைகளிலும் போதிய வெளிச்சம் கிடையாது. ஆனால் நர்புலிங்கா வசிப்பதற்கு ரமணீயமான இடம். கோடைக்காலம் தொடங்கியதும் தலாய் லாமா பொட்டாலாவை விட்டுத் தங்கச் சிவிகையில் நர்புலிங்காவுக்கு ஊர்வலமாகச் செல்லும்பொழுது, நகர மக்களும், நாட்டு மக்களிலே பலரும் வழியெங்கும் குழுமியிருந்து வணங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். எடுபிடிகள், தோரணங்கள், கொடிகள், வெண்ணெயிலே செய்த பெரிய உருவங்கள், எக்காளம், துந்துபி, சங்கம், கொம்பு, முரசு முதலிய வாத்தியங்கள்-எதிலும் குறைவு கிடையாது. இராணுவத்தார் அணிவகுத்துச் செல்வர். ஆயிரக்கணக்கான துறவிகள் துதி பாடிக்கொண்டு முன்னால் நடப்பர். செல்வம் மிகுந்த குடும்பத்தார்கள் பகட்டான பட்டுடைகள் அணிந்து குழுமியிருப்பார்கள். சாதாரண மக்களும் சிறந்த ஆடைகள், அணிகள் பூண்டு திருவிழாக் கோலத்துடன் காட்சியளிப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாகத் திரள்திரளாக நிற்கும் அந்த

216