பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முதலியவற்றைக் கைவிட்டுத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். அவர் உறுதியுடன் மறுத்து விட்டார். அதனால் சீனர்கள் அவருடைய ஆசிரமத்தை எரித்தார்கள். பிரார்த்தனை நூல்களையும் பூசனைக்குரிய பொருள்களையும் நெருப்பிலிட்டார்கள். ஊர் மக்களைக் கூட்டிவைத்து, அவர்கள் முன்னிலையில் துறவியை இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி விட்டார்கள் !

பல இடங்களில் துறவிகளைக் கூட்டம் கூட்டமாகச் சீனர் அரிந்து தள்ளியிருக்கின்றனர். செல்வர்கள் பலர் வரிசையாக நிறுத்தி வைக்கப்பெற்றுச் சுடப்பட்டிருக்கின்றனர். இத்தகைய கொலை பாதகங்களில் பெரும்பாலானவை ஜனங்களின் முன்னிலையிலேயே நடைபெற்றன. ஏனெனில் ஜனங்கள் பயந்து நடுங்கி, மதத்தைக் கைவிட்டுச் சீனர்களுக்குத் தலைவணங்கி நடக்கச் செய்வதற்கு இவை மிக்க உதவியாகக் கருதப்பெற்றன. துறவிகளுக்கு உதவி செய்தவர்களும் வதைக்கப்பட்டார்கள்.

தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடியாத துறவிகள் மக்களுக்கு உதவி செய்யமுடியாது என்பதைக் காட்டுவதற்காகச் சீனர்கள் லிடாங் மடத்தில் மக்கள் முன்பு இரு கொடிய வதைகளைச் செய்து காட்டினர். கோரி ஜென், கோ-லாக் ஜென் என்ற இரண்டு துறவிகளை நிற்க வைத்துத் துப்பாக்கிகளால் சுட்டனர். அவர்கள் உடனே மாண்டுவிடாதபடியே குண்டுகள் விடப்பட்டன. பிறகு நோரிஜென் உடலின் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி, அவர் கழுத்தை நெரித்துக் கொன்றார்கள். நோ-ஸாக் ஜென்னேக் கற்களால் அடித்து, கடைசியில் கோடரியால் பிளந்து தள்ளனார்கள்!

சிறு குழந்தைகளைக்கொண்டே அவர்களுடைய

239