பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெளத்த ஆலயங்களும், செந்நிறமான கோபுரங்களும், வெண்மையான அரண்மனைகளும் கொண்ட இந்நகர் பனிபடர்ந்த இமாலயச்சாரலில் எங்கிருந்தோ திடீரென்று எழுந்து நிற்பதுபோல் எழிலுடன் காட்சியளிக்கின்றது. பழைய சின்னங்கள் நிறைந்த இந்நகரில், மின்சார விளக்குகள், நல்ல சாலை, மோட்டார் கார்கள், பஸ்கள் முதலிய நவீன வசதிகளும் இருக்கின்றன.

காட்மாண்டு தவிர, இந்துக்களுக்கு முக்கியமான வேறு திருப்பதிகளும் நேப்பாளத்திலிருக்கின்றன. சிறையிருந்த செல்வியாகிய சீதை இராமரைத் திருமணம் செய்து கொண்ட நகராகிய ஜனகபுரி அங்கே தான் இருக்கின்றது. முக்திநாத், லலிதபுரி, பக்தபுரி முதலிய இடங்களுக்கெல்லாம் இந்தியர் யாத்திரை செல்வது வழக்கமாயுள்ளது. மைசூரைப்போல் காட்மாண்டுவிலும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது.

நேப்பாள மகாராஜாவின் முழுப் பெயர் மாட்சிமை தங்கிய மகா ராஜாதிராஜ கஜேந்திர வீர விக்ரம ஜங் பகாதுர் ஷா பகாதுர் ஷம்ஷீர் ஜங் தேவா . எனினும், மகேந்திர மகாராஜா என்றே எல்லோரும் சுருக்கமாய்க் கூறுவர். இவர் வடமொழியில் பெரிய பண்டிதர்; நேப்பாளி மொழியில் கவிஞராகவும் விளங்குகிறார். ஆட்சியிலும் திறமை மிக்கவர். இவருக்கு முந்திய திரிபுவன மகாராஜா காலம் வரை நேப்பாளத்து மன்னர்கள், சொந்தமான அதிகாரமில்லாமல், ‘இரானாக்கள்’ எனப்படும் மந்திரிகளிடம் கூண்டுக் கிளிகளைப் போல் கட்டுப்பட்டிருந்தனர். பல இரானாக்கள் மக்களுக்குக் கொடுமை செய்து வந்தனர். ஆனால் திரிபுவனர் பெயரளவில் மட்டும் மன்னராயிருக்க விரும்பவில்லை. அதே சமயத்தில் மக்களும் பிரதம

22