பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரங்களாகவும், பண்டங்களாகவும் கொடுத்துதவும் நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து, மற்ற பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள், மேற்கு ஜெர் மனி, ரஷ்யா, லெக்கோஸ்லோவேகியா, ஜப்பான், ஃபிரான்ஸ் முதலிய பல. மேலும் இந்தியாவில் கனரகத் தொழிற்சாலைகளையும் மற்ற ஆலைகளையும் அமைப்பதற் காக அவைகளிலே சில நாடுகள் தேர்ந்த நிபுணர்களை யும் அனுப்பி உதவி புரிந்து வருகின்றன. சில நாடுகள் தங்கள் மூலதனங்களைlஇந்தியாவில் முடக்கித் தொழில் களும் நடத்தி வருகின்றன. 1955 வரை பிரிட்டிஷ், அமெரிக்கக் கம்பெனிகள் ரூ. 308 கோடிக்குமேல் மூல தனத்தை இந்தியாவில் தொழில், வர்த்தகம், தோட் டப் பயிர்களுக்காக முடக்கி யிருக்கின்றன. இந்த வகையில் அமெரிக்க மூலதனத்திற்கும், பிரிட்டிஷ் மூலதனத்திற்கும் முறையே அமெரிக்காவிலும் இங்கி லாந்திலும் கிடைப்பதைவிட இந்தியாவில் கூடுதலான இலாபம் கிடைப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் அந்நியர் முதலீடுகளால் அவர்களுடைய ஆதிக்கியமும் செல்வாக்கும் மேலோங்கிவிடாதபடி இந்திய அரசாங் சும் சில ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. சில ஸ்தா பனங்களில் நமது அரசாங்கம் பங்கெடுத்துக் கொள் கின்றது; சிலவற்றில் முதலீடு செய்யக்கூடிய இந்தியர் களுக்குப் பங்குகள் அளிக்கப்பெறுகின்றன. தொழில் கள் யாவும் அரசாங்கத்தின் கண்காணிப்பிலேயே நடந்து வருகின்றன. வெளி நாட்டவரோ, உள்நாட்டவரோ முதலீடு செய்து தொழில்களை வளர்ப்பதற்குத் தனியார் மூல தனம் அவசியம் என்பதை நமது அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கின்றது. அத்துடன் பொதுத் துறை யில் அரசாங்கம் நிறுவும் தொழில் நிலையங்களிலும் அநுபவமுள்ள தனியார்களின் திறமையைப் பயன் 26 S.