பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சணல் ஆலைகள் நம் ஏற்றுமதிப் பொருள்களில் முதன்மையானவை சணலைக் கொண்டு நெய்த பொருள்கள். பெரிய விரிப் புக்கள் நெய்வதற்கு 1962-ல் அகலமான பெருந்தறி கள் 650 லிருந்து 1,350-ஆகப் பெருக்கப்பட்டன. விரிப்புக்களை ஏற்றுமதி செய்ததால் மட்டும் ரூ. 25 கோடி கிடைத்திருக்கிறது: சனலில் செய்த பொருள் களில் மொத்தம் ரூ. 150 கோடி கிடைத்திருக்கிறது. கிராமத் தொழில்களும், குடிசைத் தொழில்களும் அபரிதமாக வளர்ந்துள்ளன. அவைகளுக்காகத் தனி ஸ்தாபனங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இன்டஸ் டிரியல் எஸ்டேட்ஸ் என்ற 60 தொழிற் பண்ணைகள் அமைந்துள்ளன. இன்னும் ஏற்பட்டுக்கொண்டே வரு கின்றன. சிறிய அளவில் இயந்திர சாதனங்களுடன் தொழில் செய்ய விரும்புவோர்களுக்கு அவை மிகவும் உதவியாக உள்ளன. மின்சார உதவியுடன் நடை பெறும் 1,000 சிறு தொழிற்சாலைகளும் ஏற்பட்டுள் ளன. கைத்தறித் துணி உற்பத்தி 74 கோடிக் கஜத்தி லிருந்து 190 கோடியாகக் கூடியுள்ளது. கதர்த் துணி 70 லட்சம் கஜத்திலிருந்து 740 லட்சம் கஜமாகப் பெருகியுள்ளது. பட்டு உற்பத்தியும் சுமார் இரு மடங் காகியிருக்கின்றது. தனியார் துறையில் நடைபெற்று வரும் தொழில் களுக்கும் அரசாங்கம் கடன் உதவி செய்வதுடன், தொழில் நிபுணர்களின் உதவியையும் அளித்து வரு கின்றது: புதுத் தொழில் ஸ்தாபனங்கள் ஏற்படவும் ஊக்கமளிக்கின்றது. த னி யார் தொழில்களும் அமோகமாக வளர்ந்து வருகின்றன. --- அடிப்படையான கனரகத் தொழில்கள் அமைந் தால்தான் மற்றைத் தொழில்கள் வள்ர முடியும். அதல்ை ஜாம்ஷெட்பூரிலுள்ள டாட்டா உருக்குத் 27 6