பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரூ. 2,000 கோடிக்கு உயரவேண்டியது அவசிய மென்று நமது உருக்கு, கனரகத் தொழில்களின் மந்திரி அறிவித்துள்ளார். போக்கு வரத்து வசதிகள் திட்டக் காலத்தில் ரயில்வேக்களின் வளர்ச்சி அபாரமானது. 1,200 மைல் நீளத்திற்குப் புதிதாக ரயில் பாதைகள் அமைந்துள்ளன. 1,300 மைல் நீளத் திற்குப் பழைய பாதையுடள் கூடுதலாக ஒரு பாதை அமைத்து, இரட்டைப் பாதையாக்கப் பட்டிருக்கின் றது. 880 மைல் ரயில் பாதையில் மின்சார வண்டிகள் ஒட ஏற்பாடாகியுள்ளது. சாமான்கள் ஏற்றிச் செல்வ திலும் 1950-51-இல் 910 லட்சம் டன்னக இருந்தது 1,540 லட்சம் டன்னக உயர்ந்தது. ரயில்வே எஞ்சின்கள் உற்பத்தி செய்வதற்காக 1950-இல் தொடங்கியுள்ள சித்தரஞ்சன் லோகோ மோடிவ் ஒர்க்ஸ் ஆசியாவிலேயே பெரிய எஞ் சின் உற்பத்தித் தொழிற்சாலையாக விளங்குகின்றது. ஆண்டுதோறும் அது 200 எஞ்சின்களையும், 100 தனி பாய்லர்களையும் உற்பத்தி செய்ய முடியும். 300 எஞ்சின்கள் உற்பத்தியாகும் வகையில் அதில் ஏற்பாடு செய்யப் பெறுகின்றது. கல்வி நாட்டின் பள்ளிகள் 2,30, 555 லிருந்து 3, 98 200 ஆகப் பெருகியுள்ளன. தொடக்க நிலைப்பள்ளிகளின் வளர்ச்சி 63%, நடுநிலைப் பள்ளிகளின் வளர்ச்சி 191%, உயர்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சி 128%. so 78