பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயரமும், 1215 அடி நீளம் காங்கிரீட்டும், 20,940 அடி மண்ணும் கொண்டு அமைந்தது. உத்தேசச் செலவு ரூ. 17,92,00,000, 2,211 அடி நீளமுள்ள துர்க்காபூர் அணையும், பாலமும் 1955, ஏப்ரலில் கட்டி முடிக்கப்பெற்றன. சுமார் ரூ. 23 கோடி இவற் றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த அணையின் தண்ணீரால் பயனடையக்கூடிய பரப்பு பத்து லட்சம் ஏக்கருக்கு மேற்பட்டது. மேலே குறித்த எல்லாத் திட்டங்களுக்குமாக மொத்தம் ரூ. 128; கோடி ஆகு மென்று தெரிகிறது. T அரசாங்கக் கம்பெனிகள் உருக்கு உற்பத்தி : உருக்கு உற்பத்தி செய்வதற் காக ஹிந்துஸ்தான் ஸ்டில் (பிரைவேட்) லிமிடெம் கம் பெனி 1954-இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூல தன அளவு ரூ. 100 கோடி. இதற்கு ஆலோசனை கூறு வோர் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த குருப் டெமாக் கம்பெனியார். ஆரம்ப நிலையில் நம் நாட்டிலேயே ஆண்டுதோறும் சுமார் 45 லட்சம் டன் உருக்கு உற் பத்தி செய்தல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத் தின் நோக்கம். 1962-63-இல்தான் இது பெருமளவு நிறைவேறியுள்ளது. நம் உருக்குத் தொழிற்சாலைகளில் 40 லட்சம் டன் உற்பத்தியாகி யிருக்குமென்று தெரி கின்றது. இதுவே மகத்தான சாதனைதான். ஆனல் இந்த அளவு உற்பத்தியைக் காண்பதற்கு மொத்தம் ரூ. 1,000 கோடிவரை முதலீடு செய்ய வேண்டியிருந் தது கனிகளில் இரும்பு, நிலக்கரி எடுப்பது முதல், தொழிற்சாலைகளுக்குக் கொணர்ந்து சேர்க்க ரயில் வசதிகள் செய்து, தொழிற் சாலைகளில் உருக்கி உருக் குத் தயாரிப்பதுவரை இவ்வளவு பெரும் தொகையில் நிறைவேறியுள்ளது. இதல்ை நாட்டிற்கு மி கு ந் த "285