பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில்வேஸ் நடந்து வருகின்றது. பொதுத் துறையி லுள்ள முதன்மையான தொழில் இதுதான். இதற்கு அடுத்ததாகக் குறிப்பிடத் தக்கது தபால் - தந்தி இலாகா. துறைமுகங்களை நிர்வகிக்கப் போர்ட் டிரஸ்டுகள் ஏற்பட்டிருக்கின்றன. பெரிய துறை முகங்களை மத்திய அரசாங்கமும், மற்றவைகளே அந் தந்த ராஜ்யமும் நிர்வகித்து வருகின்றன. . . அணுச்சக்தி உற்பத்திக்காக ட்ரோம்பேயில் தோரி யம்-யுரேனியம் தொழிற்சாலையும், அதுபற்றி ஆராய் வதற்குரிய ஸ்தாபனமும் அமைந்துள்ளன. சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ்: மேற்கு வங்கா ளத்தில் ரயில்வே எஞ்சின்கள் தயாரிக்கும் சித்தரஞ் சன் தொழிற்ச்ாலை நாட்டிற்கே பெருமையளிக்கும் நிறுவனமாகும். 1950-இல் முதலாவது எஞ்சின் உற் பத்தியாயிற்று. ஆண்டுக்கு 300 பிராட்கேஜ் எஞ்சின் கள் தயாரிக்க ஏற்பாடாகி யிருக்கிறது. பெரம்பூர் கோச் பாக்டரி : சென்னையிலுள்ள பெரம் பூர் இன்டெக்ரல் கோச் பாக்டரி"யில் ரயில் பெட்டிகள் (கோச்சுகள்) 1955ஆம் வருட இறுதியிலிருந்து தயா ராகி வருகின்றன. இவை முந்தியிருந்த மரப் பெட்டி களா யில்லாமல், முற்றிலும் உருக்கினல் தயாராகின் றன. இத்தகைய கோச்சுக்கு ஸ்விஸ் கம்பெனி ஒன்று தனி மாதிரி (டிசைன்) ஒன்று தயாரித்துக் கொடுத் திருந்தது. ஒரு நாளைக்கு 2 பெட்டிகள் வீதம் ஆண் டுக்கு 600 கோச்சுகளுக்கு மேலாகப் பெரம்பூரில் தயா ரிக்க முடியும். -- இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை உலகிலுள்ள பெரிய ரயில் பெட்டித் தொழிற்சாலைகளில் ஒன்று. இதுவரை பத்து ஆண்டுகளில் இது 4,500 பெட்டி களைத் தயாரித்துள்ளது. 303