பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் அதைப் பயன்படுத்துவதாகும். வலை வீச ஆசை தரும் அலை வீசும் வயல்கள் என்று நம் நிலவளத்தைப் பற்றி நாமக்கல் கவிஞர் மகிழ்ச்சியோடு பாடியுள்ளார். தண் ணர்தான் நமது முதல் பிரசினை எனினும், விளை பொருள்களைப் பெருக்குவதற்கு மிகுந்த ஆராய்ச்சி யுடன் நவீன விஞ்ஞானத்தையும் பயன்படுத்திக் கொண்டு, வேறு பல திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். விவசாயத்திற்குத் தேவையான உயர்ந்த ரகமான விதைகள், இரசாயன உரங்கள், இயற்கை யான எரு, குழை முதலிய பசுந்தழைகள், கம்போஸ்ட் உரம் ஆகியவை விவசாயிகளுக்கு ஏராளமாகக் கிடைப் பதற்குச் சென்னை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. வறுமையால் வாடும் உழவர்களுக்குக் கடன் உதவிகள் செய்யப் பெற்றன. நவீன இயந்திரக் கலப்பைகளையும் புல்டோஸர்களையும் அரசாங்கம் வாங்கி வைத்துக் கொண்டு, தேவையானவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்து வந்தது. பயிர்களை அழிக்கும் பூச்சிகளுக்கும், பயிர் நோய்களுக்கும் மருந்துகள் அளித்து, அவை களை உபயோகிக்கும் கருவிகளும் கொடுத்து உதவி யுள்ளது. நகரங்களில் நகர் மன்றங்கள் கம்போஸ்ட் உரம் தயாரித்து ரூ. 2-க்கு ஒரு டன் வீதம் கொடுக்கும் படி ஏற்பாடு செய்துள்ளது. கிராமங்களிலேயே உமி, சருகுகள், காளான், சாணம் முதலியவற்றில்ை இந்த உரம் தயாரிக்கச் சமுதாய நல வளர்ச்சி வட்டாரங் களில் தீவிர முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. வேர்க்கடலை, எள், ஆமணக்கு முதலிய எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 1950-51-ல் 7,66,000 டன் கை இருந்தது 10 லட்சம் டன்னக உயர்ந்துள்ளது. பருத்தி 1,20,000 பேல்கள் அதிகமாக உற்பத்தியாகி யுள்ளது. புகையிலை பயிராகும் நிலங்கள் பெருக்கப்பட் 3.14