பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நடுப் பகுதியின் எல்லை இயற்கையான பூகோள அமைப்பை அடிப்படையாய்க் கொண்டிருப்பதுடன், பழைய சரித்திரம், இலக்கிய வரலாறுகள், பரம்பரையாக வந்த மத சம்பிரதாயங்கள் முதலியவையும் அதற்கு அரணாக விளங்குகின்றன. சீன கோரும் பிர தேசங்கள்யாவும் சரித்திர ஆரம்பக் காலத்திலிருந்தே இந்திய ராஜ்யங்களோடு சேர்ந்திருந்தவை ; இந்திய மன்னர்களால் பரிபாலிக்கப்பட்டவை. இமயமலைத் தொடரின் நதிப் படுகை வழியாகச் செல்லும் இவ்வெல்லை பற்றிச் சென்ற 150 ஆண்டுகளாக அப்பகுதியில் சுற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் எழுதி வைத்துள்ள வரலாறுகளும், எண்ணிலடங்காத தஸ்தா வேஜுகளும் ஆதாரங்களாக விளங்குகின்றன. சீனருடன் விவாதம் செய்கையில், நம் அதிகாரிகள், அவர்கள் கோரிய ஒவ்வொரு பிரதேசமும் இந்தியர் ஆட்சியிலிருந்து வந்ததை ஆதாரங்களுடன் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

வடகிழக்குப் பிரதேசம் (நேபா)

நமது வடகிழக்குப் பிரதேச ஏஜன்ஸியை (North Eastern Frontier Agency) ஆங்கிலத்தில் சுருக்கமாக நேபா (NEFA) என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த நேபா என்ற பெயரே எல்லோருக்கும் விளங்கும் பெயராக நிலைத்துவிட்டது. இப்பிரதேசம் மத்திய சர்க்காரின் நிர்வாகத்திலுள்ளது. இது வடகிழக்கு ராஜ்யமான அஸ்ஸாமின் பகுதியாயிருப்பினும், எல்லைப்புறமாக இருப்பதன் முக்கியத்தைக் கருதி இது இந்திய ராஷ்டிரபதியின் நேர்பார்வையிலுள்ளது. அஸ்ஸாமிலுள்ள கவர்னரே ராஷ்டிரபதியின் சார்பில் இதைத் தனி யாகக் கவனித்துக்கொள்கிறார்.

அஸ்ஸாம் இராஜ்யம் நம் இராஜ்யங்களில் மிகவும்

29