பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகைய தொழில்களே பெரும் பகுதியா யிருக்கின்றன. தனியார் துறையில் தனி முதலாளிகளின் ஸ்தாபனங் களும், சிலர் பங்காளிகளாகச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனங்களும் இருக்கின்றன: குறிப்பிட்ட பங்கு தாரர்களைக் கொண்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனி களும், பல பங்குதாரர்களைக் கொண்ட பப்ளிக் லிமி டெட் கம்பெனிகளும் இருக்கின்றன. பலருடைய பங்குகளைப் பெற்று நடக்கும் பப்ளிக் கம்பெனிகளும் முதலாளித்துவ ஸ்தாபனங்களா எனில், இந்தியாவில் தற்போது அப்படித்தான் இருக்கின்றன. பொது மக்க வரிடம் பெருவாரியாகப் பங்குகள் வாங்காமல், சிலர் மட்டுமே அதிகப் பங்குகள் எடுத்துக்கொள்வதும் வழக் மாகயிருக்கிறது. சணல், நூல், ஜவுளி, சிமிண்டு, தாவர எண்ணெய், காகிதம், சர்க்கரை, சுரங்கத் தொழில் கள், மலைத் தோட்டங்களில் தேயிலை முதலியன பயிர் செய்தல் ஆகிய பல தொழில்கள் பொதுக் கம் பெனிகள் மூலம் நடந்து வருகின்றன. கம்பளி நெசவு, ஸோப்பு, கண்ணுடி, தீப்பெட்டி, உலோக வார்ப்புக்கள் முதலிய சில தொழில்களை முதலாளிகள் தனியாகவோ, கூட்டுச் சேர்ந்தோ நடத்தி வரு கின்றனர். 1961, மார்ச் 31-ந் தேதியில் இந்தியாவில் இருந்த லிமிடெட் கம்பெனிகளின் தொகை 26, 108; இவை களின் செலுத்தப்பெற்ற மூலதனம் ரூ. 1724, 6 கோடி. இவைகளில் பப்ளிக் கம்பெனிகள் 6,745; செலுத்தப் பெற்ற மூலதனம் ரூ. 876-1 கோடி பிரைவேட் கம் பெனிகள் 19,363: செலுத்தப்பெற்ற மூலதனம் ரூ. 848.5 கோடி. ரூ. 524 4 கோடி மூலதனமுள்ள அரசாங்கக் கம்பெனிகள் 137-ம் இருந்தன; இவை களில் 34 பப்ளிக் கம்பெனிகள், 103 பிரைவேட் கம் பெனிகள். 1960-இல் நாட்டிலிருந்த பலதிறப்பட்ட B 2 9