பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லெண்ணம் கொண்டுள்ளோம் என்பதற்கு அறிகுறி யாக, நாடு பிரிவினை செய்யப்படுகையில் அரசாங்கக் கையிருப்புத் தொகையாக மிஞ்சியிருந்த பணத்தில் பாகிஸ்தானுக்கு ரூ. 55 கோடி கொடுக்கப்பெற்றது. இரு ராஜ்யங்களிலும் இந்துக்களும், முஸ்லிம்களும், சீக்கியர்களும் பயமில்லாமல், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி உண்ணு விரதமும் இருந்தார். சமாதான சக வாழ்வு - இந்தியா அண்டை ராஜ்யமான பாகிஸ்தானுடன் அமைதியாக வாழ்வதற்கு ஆதாரமாக, இரு நாடு களும் எக்காரணத்தாலும் ஒன்ருே டொன்று போர் புரிவதில்லை என்று ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டு மென்று பல சமயங்களில் தெரிவித்துவத்தது. 1949. இல் இந்தியாவிலிருந்த பாகிஸ்தானின் ஹை கமிஷன ரிடம் முதலில் இவ்விஷயமாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் பிரதம மந்திரி நேரு பாகிஸ்தானின் பிரதம மந்திரிக்குக் கடிதமும் எழுதினர். பின்னலும் அவர் 1956-இலும் 1962-இலும் முயற்சிகள் செய் தார். நேருவுக்குப் பின்னல் நம் பிரதம மந்திரி லால் பகாதுார் சாஸ்திரியும் 1964-இல் பாகிஸ்தானின் சம் மதத்தை வேண்டினர். நம் வேற்றுமைகளைப் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் நாம் தீர்த் துக்கொள்ள வேண்டுமென்று அவர் 1964, ஜூன் 15-ந் தேதி பாகிஸ்தானின் ஜனதிபதி அயூப்கானுக்குக் கடிதம் எழுதினர். அவ்வாண்டுச் சுதந்தர தினத்திலும் சமாதான உடன்படிக்கைபற்றி அவர் மீண்டும் பேசினர். ஆனல் திமிர் கொண்ட பாகிஸ்தான் இது வரை அதற்கு இடம் கொடுக்கவேயில்லை. ஆரம்பம் முதலே பாகிஸ்தான் இந்தியாவைத் 3 3 S