பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்கு ஏற்றபடி தாளம் போட்டு வருகின்றன. விவகாரம் ஐ. நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நடந்து வருகின்றது. அந்தக் கவுன்சிலின் தீர்மானப்படி முதலில் போர் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தாற்போல் இருதிறத்துப் படைகளும் வாபஸாக வேண்டும். மூன்ருவதாக இந்தியாவும் பாகிஸ்தானும் தம் அரசியல் பிரசினைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிப் பேசவேண்டும். இடையிலேயே கர்ஷ்மீரில் பொது மக்கள் வாக்கெடுப்புக்கு இந்தியா இணங்க வேண்டு மென்று பாகிஸ்தான் தனக்குத் தெரிந்த தந்திரங்களை யெல்லாம் பயன்படுத்தி வருகின்றது. * பாகிஸ்தானே இந்தியா மீது படையெடுத்தது என்று அமெரிக்காவோ, பிரிட்டனே, ஐ. நா. வோ இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை. கண்முன்பு நடந்த விஷயங்களைக் கூட அவை ஒப்புக்கொள்ள ஏன் மறுக்கின்றன ? பாகிஸ்தானுக்கு அநுகூலமாக அவை ஏன் நடந்து வருகின்றன ? ஏனெனில் ஒவ்வொரு நாடும் தன் சுயநலத்தையே கவனிக்கின்றது. அமெரிக்காவுக்கு விமான தளங்கள் முதலியவற்றைக் கொடுத்துப் பாகிஸ்தான் அதனுடன் உடன்படிக் கையும் செய்துகொண்டிருக்கிறது. அது பாகிஸ் தானக் கைவிடவும் விரும்பவில்லை, விமான தளங்களை விட்டுவிடவும் விரும்பவில்லை. பிரிட்டன் பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்கு நஷ்டங்கள் ஏற்படுவதை விரும்பு கின்றது. ஆதியிலேயே காஷ்மீர் இந்தியாவுடன் சேராமல் தனித்திருக்கச் செய்வதற்கு அது பல முயற்சிகள் செய்து தோல்வியுற்றது. அதனால்தான் இந்தியாவே பாகிஸ்தான் மீது படையெடுத்ததாக அது சிறிது காலம் சொல்லிவந்தது. மற்ற நாடு களில் பலவும் தத்தம் சுயநலத்திற்காகவே பேசு கின்றன. ர ஷ யா மட்டும் ஆரம்பத்திலிருந்து 352