பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதிய உணவு, உடை முதலியவை கூடக் கிடைக்கா மல் தவித்துக்கொண் டிருக்கும்பொழுது, இத்தனை கோடி டாலர்களை வெடி மருந்துக்கும், குண்டுகளுக் கும், வேறு பல கொலைக் கருவிகளுக்குமாக வீணுகக் கொட்டுவதைக் கண்டு அறிஞர்கள் மனக் கொதிப் படைகின்றனர். மேலும் அணுகுண்டுகளும், ஹைட்ரஜன் குண்டு களும், ஆயிரக்கணக்கான மைல்கள் பாய்ந்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் இப்பொழுது சில பெரிய நாடு களிலே மட்டும் இருக்கின்றன. போரில் இவைகளை உபயோகிக்க நேர்ந்தால், உலகமே நாசமுறும். மக்கள் மட்டுமின்றி, உயிரினமே அழியவும் கூடும். அத்ககைய நிலையில் மனித சமுதாயம் தானகவே தற்கொலை செய்துகொண்டு மடியுமா, அல்லது மேலே விவரித் துள்ளபடி உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வளர்ச்சி யடைவார்களா ? இந்த இருப தாம் நூற்ருண்டில், நம் காலத்தில், இதற்கு முடிவு தெரியும். சர்வநாசம் விளைக்கும் குண்டுகளும், கணைகளும் இப்பொழுது எ வர்களுடைய பொறுப்பில் இருக்கின் றன ? சில அரசியல் தலைவர்களுடைய காப்பில் இருக் கின்றன. வல்லரசுகள் அமெரிக்காவின் தலைமையிலும், ரஷ்யாவின் தலைமையிலும் இரு பிரிவுகளாக நிற்கின் றன. இரண்டு முகாம்களிலும் உலகை அழிக்கும் ஆற்ற லுள்ள ஆயுதங்கள் பெருக்கமா யுள்ளன. இதுவரை அவைகளை அந்த முகாம்கள் ஏ ன் உபயோகிக்கவில்லை? உலகமே நாசமுறும் என்ற ஐயத்தினுல்தான் உப யோகிக்கவில்லை. சுருக்கமாய்ச் சொன்னல், அணு குண்டு முதலியவற்றின் ஆற்றலே அவைகள் பயன் படாமல் தடுத்து வைத் திருக்கின்றது. இந்தத் தடுப் புக்கும் ஒர் எல்லையுண்டு. இதை நம்பி உலக சமா 357