பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் கோடி கோடியாய்ச் செலவு செய்து நிலப்படை, கடற்படை, விமானப் படைகளையும் வைத்துக்கொண் டிருக்கும் காரணம் என்ன ? இதைப் புரிந்துகொண் டால், அணு ஆயுதங்கள் முதற் கருவிகளாகவும், கடைசிக் கருவிகளாகவும் பயன்படலாமே யன்றி, பெரும்பாலான சண்டைகள் முற் காலத்தைப்போல் போர் வீரர்களாலேயே முடிவு செய்யப் பெறவேண் டும் என்பது தெளிவாகும். முதலில் அணு ஆயுதங் களினல் வெற்றி பெற்ற நாடும் பின்னும் பல நாள் நிலத்திலும், நீரிலும், வானிலும் போராடியே இறுதி யான வெற்றிபெற முடியும். ஆகவே அணு ஆயுதங்கள் இல்லாதபோதிலும், நாம் மற்றைப் படைகளைக் காலத்திற்கு ஏற்ற நிலையில், ஏற்ற அளவில், நிறுவிக் கொள்ளல் அவசியமாகின்றது. கம்யூனிஸ்ட் சீன கற்பித்த பாடம் 1962-ஆம் வருடத்திய சீனப் படையெடுப்பு நம் கண்களை நன்ருகத் திறந்து வைத்துவிட்டது. இந்த விழிப்பு ஏற்பட்டிராவிட்டால், இன்னும் நெடுங்காலம் நாம் துயில் கொண்டிருப்போம். பின்னல் மீளமுடியாத பெரிய அபாயங்களில் நாம் சிக்கி யிருக்கும்படி நேர் வதைச் சீனப் போராட்டம் தவிர்த்துள்ளது எனலாம். கனவு உலகத்திலிருந்து பிரத்தியட்ச உலகுக்கு நம் மைக் கொண்டுவந்து சேர்த்தது அதுவேயாகும். சீனப் படை யெடுப்பினல் பாரதப் பொது மக் களுக்கு நாட்டுப் பாதுகாப்பில் அதிக அக்கறை ஏற் பட்டுள்ளது. பஞ்சசீலக் கொள்கையே பேசிக்கொண் டிருந்த நம் அரசாங்கத்திற்கு, ஒருதலைப் பஞ்சசீலம் அபாயமானது என்றும், இரு திறத்தாரும் உண்மை யாக அக்கொள்கையைக் கடைப்பிடிக்காவிட்டால், முடிவு போர்தான் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. B 6 0