பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளாஸ்விட்ஸ் முதலியோர் கூறியுள்ள தத்துவங் கள், மேயச் செல்லும் மாட்டுக்குக் கொம்பிலே புல்லைக் கட்டியனுப்புதல் போலில்லாமல், இராணுவ வீரர் சந்தர்ப்பத்திற்கும், இடத்திற்கும் ஏற்றபடி திட்டம் வகுத்துக்கொள்ளும் ஆற்றலையும், அறிவையும் அளிப் பவை. போர் என்பது விஞ்ஞான முறையில் அமைந்த வேடிக்கையன்று, அது பல நாட்டாருக்குள் நடைபெறும் விளையாட்டுமன்று, அது பலாத்காரம் என்று கிளாஸ்விட்ஸ் கூறியுள்ளார். போரில் மித மானது பரோபகாரமானது என்பதே கிடையாது. உதிரம் சிந்தாமல் வெற்றியடைந்த தளபதிகளைப் பற்றி நாம் கேள்விப்பட விரும்பமாட்டோம். குருதி வெள்ளம் பாயும் போர் பயங்கரமான காட்சி என்ருல், அதல்ைதான் அதை அதிகமாய்ப் போற்றி, நம் வாள் களின் முனை நாளடைவில் மழுங்கிப் போகாமல் பார்த் துக்கொள்ள வேண்டும் ; ஜீவகாருண்யத்தால் அப் படிப் போக நேர்ந்தால், வேருெருவன் வந்து கூர்மை யான வாளால் நம் கைகளை உடலிலிருந்து வெட்டி யெறிந்துவிடுவான்' என்றும் அவர் எச்சரிக்கை செய் துள்ளார். கூட்டுச் சேர்ந்து எதிரிகளுடன் போரிடுதல், பொருதிப் பொருதி அவர்களை அழித்தல், போர்த் தந்திரத்தால் அவர்களை நிர்மூலமாக்கிவிடுதல் முதலிய பல போர் முறைகளைப்பற்றி அவர் விவரித்திருக்கிருர், மனே தத்துவப் போர் பற்றியும் அவர் அந்தக் காலத்திலேயே குறிப்பிட்டிருத்தல் வியப்பானது. பிர சாரம் முதலியவற்ருல் எதிரிகள் உளவலி குன்றிப் போகும்படி செய்யும் மனே தத்துவப் போரை, ஆயுதப் போருக்கு முந்தியோ, போரினிடையிலோ, தொடங்கு தல் அவசியம் என்பதோடு, ஆயுதப் போர் இல்லாமலே எதிரிகள் மனமுடைந்து ஒடும்படி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். $71