பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனடியாகச் சீனப் படைகளின் அளவுக்கு நம் படைகளையும் பெருக்கிக் கொள்ளாவிட்டாலும், நம் படைகளின் வலிமையைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டே யிருக்க வேண்டும். நாட்டிலுள்ள வசதிகள் பல நாடுகளில் கட்டாய இராணுவ சேவை நடந்து வருகின்றது. இந்தியாவுக்கு அது அவசிய மில்லே யென்று பொதுவாகக் கருதப்படுகின்றது. கட்டாயப் படுத்தாமலே இலட்சக் கணக்கில் வீரர்கள் இராணுவத் தில் தாமாகவே சேர்வதால், கட்டாயச் சட்டத்திற்கு இங்கே அவசியமில்லையென்று சிலர் கூறுவர். ஆயினும் இப்பொழுதுள்ள நிலைமையைப் பார்த்தால், பெரிய அளவில் மக்களுக்குக் கட்டாய இராணுவப் பயிற்சி யாவது கொடுத்து வரவேண்டியது அவசியமாகின்றது. நாட்டு மக்கள் அனைவருமே இராணுவ விஷயங்களில் ஆர்வ ம் கொள்ளவும், உடற்பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் பெறவும் கட்டாய இராணுவ சேவைச் சட்டம் இருந்தால் நலம். பயிற்சி பெற்றவர்கள் அனை வரையும் பட்டாளங்களிலே சேர்த்துக்கொள்ளாவிட் டாலும், தேவையானவர்களே மட்டு ம் பொறுக்கி யெடுத்துக்கொள்ளலாம். நமது ஜனத் தொகையில் இராணுவ சேவைக் குரிய வயதுடையவர்கள் ஏராளமாக உள்ளனர். விவரம் வருமாறு : வயது மொத்தம் ஆடவர் திருமணமாகாத தொகை ஆடவர் தொகை 15-முதல் 24-வரை 3,83,37,500 2,07,85,000 25- , , 34 3,48,43,750 46,26,250 மொத்தம் 7.31,81,250 , 2,54,11,250 -_க_. 376

  • - o -