பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மென்றும், வாழ வேண்டுமென்றும், அதுவே சமாதான சக வாழ்வென்றும் ஸோவியத் பிரதமர் குருஷ் சேவ் அடிக்கடி கூறி வந்தார். நமது பிரதமமந்திரி நேரு அவர்களும் இந்தக் கொள்கையை முழுமனதோடு போற்றி வந்தார். இதைப் பற்றி அவர் 1951-ல் நார்மன் கலின்ஸ் என்பவரிடம் கூறிய தெள்ளத் தெளிவான மொழிகள் இவை : “எங்களுடைய வழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறைகளில் சீனா அபிவிருத்தியடைந்து வருகின்றது. சீனா விவகாரத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. எங்கள் விவகாரத்தில் சீனா தலையிடுவதையும் நாங்கள் விரும்பவில்லை.” இதுதான் சக வாழ்வின் உண்மைப் பொருள். ஆனால் நாம் வாழ்வதையோ, முன்னேறுவதையோ கம்யூனிஸ்ட் சீனா விரும்பவில்லை. இந்தியா மீது உலகமே திடுக்கிடும்படியான ஆயுதம் தாங்கிய பெரிய போரைச் சீனா நடத்த முன் வந்தது. இதுதான் அதன் சக வாழ்வு !

பஞ்ச சீலங்களுக்குப் பதிலாகச் சீன கீழ்க்கண்ட பஞ்சமாபாதகங்களை மேற்கொண்டிருக்கின்றது :

1. அண்டை நாட்டின் நிலங்களை அபகரித்தல்.
2. ஆக்கிரமிப்பு.
3. நாட்டின் சுதந்தரத்தை மறுத்துத் தன் விருப்பப்படி பலாத்காரம்
செய்தல்
4. தனக்கு அடிமையாக்குதல்.
5. ஏச்சு, பொய்ப் பிரசாரம், வஞ்சனை, கொலை,போர்,

சீனா கோரும் 50,000 சதுர மைல் நிலப்பரப்பைப் பற்றி நாம் அதனுடன் சமாதானம் பேசி வந்தோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமலிலுள்ள நம் எல்லைகளைப் பற்றி விளக்கிச் சொன்னாேம். நம்மிட முள்ள எல்லைகள் பற்றிய பழைய பூகோளப் படங்களை

53