பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லும் வெட்கமில்லாமல் ஈடுபட்டுவிட்டது. கம்யூனிஸம் வேறு, ஏகாதிபத்திய ஆசை வேறு; ஒன்றுக்கொன்று நேர்முரனானது. சீனா இரண்டில் எதை அதிகமாய்ப் பற்றிக்கொண்டிருக்கின்றது? ஏகாதிபத்திய ஆசைக்காக அது தன் கம்யூனிஸத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றது என்பது தெளிவு. எனவே தான் பிரதமமந்திரி நேரு சீனாவின் நோக்கம் ‘இராஜ்ய விஸ்தரிப்புத்தான்’ என்று ஆணித்தரமாகச் சொல்லி வந்தார்.

8. இந்தியா பரிபூர்ண சுதந்தரம் பெற்ற பின்னரும் பிரிட்டிஷ் காமன்வெல்தில் சேர்ந்திருக்கின்றது. இங்கிலாந்து, கானடா, ஆஸ்திரேலியா போன்ற எல்லாக் காமன்வெல்த் நாடுகளுடனும் அதற்கு இயற்கையான தொடர்பு உண்டு. அத்துடன் அமெரிக்க ஐக்கிய நாட்டுடனும் அது நெருங்கிய உறவு கொண்டு, பெரிய அளவில் அமெரிக்க உதவிகளையும் பெற்று வந்தது. மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளும் நமக்கு ஆதரவானவை. இந்தியாவில் அமைந்துள்ள ஜனநாயக ஆட்சிமுறை மேலை நாடுகளில் நெடுங்காலமாக நடைபெற்று வரும் ஜனநாயகமேயாகும். பார்லிமென்டு, சட்ட சபைகள், ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள், வயது வந்தோர் வாக்குரிமை, தேர்தல்கள், தேர்தலின் மூலமாக மக்களே ஒரு கட்சியின் ஆட்சியை நீக்கி வேறு கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தல் இம்முறைகளெல்லாம் அந்த ஜனநாயகத்தைச் சேர்ந்தவை.

ஸோவியத் ரஷ்யாவிடமும் நமது உறவு இதுவரை நிலைத்திருக்கின்றது. நமது தொழில்முன்னேற்றத்திற்கு ரஷ்யா உதவிவருவதுடன், மற்றும் சில ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.

இன்றைய உலகில் அமெரிக்காவின் தலைமையி

60