பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


அரசு ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறாேம். உலகில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் நம் சகோதர நாடுகளே என்று பரந்த மனப்பான்மையுடன் கருதும் அளவுக்கு நம்மைப் பாரதத்தின் பண்பு பக்குவப் படுத்தியிருக்கிறது. பண்பைச் செயலிலே காட்டும் முறையில் இன்று நாம் உலக நாடுகளில் பலவற்றுடன் தோழமை கொண்டாடும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறாேம்.

இந்த நிலையில் பசித்தவன் பழங்கணக்கு பார்த்ததுபோல் மூன்றாண்டுகளுக்கு முன் திடீரென சீனா நம் நாட்டின்மீது போர் தாெடுத்தது. தீர்ந்து கிடக்கிற எல்லைக் கொள்கைகளையும், தோழமை பாராட்டி வந்திருந்த பெருந்தன்மையையும் அலட்சியப்படுத்திப் புறக்கணித்துவிட்டு, அதிக்கிரமமான முறையில் போர் தொடுத்தது. போர் என்ற பேச்சுக்கு இடமில்லாத சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்துக் கொடுத்திருந்தார் ஆசிய ஜோதியான நம் நேருஜி. அந்தக் கொள்கைகளை மீறுவதில் ஒரு வெட்க உணர்ச்சிகூட இன்றி, கூர்தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கிற முறையில் நம் மீதே ஆக்கிரமிப்புச் செய்தது சீனா. சீனர் என்பவர் மனித இயல்பு மரத்துவிட்ட அரக்கர்கள் என்பதனை நாம் நம்ப முடியாமல் பிறகு நம்பி, அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கும் வழிகளில் இறங்கினாேம்; பலன் : அவர்கள் போரை விட்டு ஓடி ஒளிந்துகொண்டனர்.

சீனாக்காரரின் அனுபவத்தைக் கண்ட பிறகும்கூட நமது இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தான் காஷ்மீர்ப் பிரச்னையைக் கொண்டு சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா மீது போர் தொடுத்தது. இன்று