பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பாய்ந்துவிட வேண்டும் என்பது சீன சர்க்காரின் கட்டளை.

ஆயினும், எங்கோ ஏதோ கோளாறு நேர்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் சீனா அமெரிக்காவையும், ரஷ்யாவையும் போன்ற வல்லரசாகத் தானும் விளங்க வேண்டுமென்றும், விரைவிலே தானும் அணுகுண்டு செய்து வெடிக்கச் செய்து பார்க்க வேண்டுமென்றும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வந்தது ஒரு புறம். மறுபக்கத்தில் அதன் அடிப்படையே ஆட ஆரம்பித்துவிட்டது. 65 கோடி மக்களுக்கும் போதிய உணவைக்கூட அதனால் உற்பத்தி செய்ய முடியவில்லை ! 1961-இல் அந்நாட்டில் பெரும் பஞ்சமே தோன்றி விட்டது. இந்தச் செய்தி சிறிது சிறிதாக முதலில் ஹாங்காங்கிலிருந்து வெளிவந்தது. பிறகு எல்லாம் வெட்ட வெளிச்சமாயிற்று. சீனா எப்போதுமே உணவு சம்பந்தமாக மிகவும் பற்றாக்குறை யுள்ளதுதான். ஜனங்களும் பட்டினியிலும் பஞ்சத்திலும் பயிற்சி பெற்றவர்கள்தாம். ஆயினும் கருணாமூர்த்திகளான கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் அங்கே பஞ்சம் தோன்றியதுதான் வியப்புக்குரியது. உற்பத்திகளைப் பெருக்கு வதற்காகத் தீட்டிய திட்டங்கள் பஞ்சத்தைப் பெருக்கிவிட்டன. கிடைத்த உணவுப் பொருள்களையும் பங்கீடு செய்தளிக்க வேண்டியதாயிற்று. 1958-இல் 37; கோடி டன் தானியங்கள் விளையுமென்று திட்டமிட்டதில், 25 கோடி டன்தான் கிடைத்தது. அந்த ஆண்டில் ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், கானடா நாடுகளிலிருந்து ரூ. 170 கோடிக்குத் தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1961 மாரிக் காலத்திலும் போதிய உணவில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நாடு முழுதிலும் அவதிப்பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஹாங்காங்கிலுள்ள சீனர்கள்

64