பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கிறார்கள். நாம் விடுதலை பெற்றவர்கள். நம் சுதந்தர ஜனநாயக அரசாங்கம் பதினெட்டே வயதுடையது. இன்னும் பல்லாண்டுகள் நாட்டவர் அனைவரும் அல்லும் பகலும் அயராமல் உழைத்தால்தான் இந்தியா மற்ற மேலை நாடுகளின் நிலையை அடைய முடியும். சாதாரண மக்களைவிடப் படித்தவர்களுடைய பொறுப்பு மிக மிக அதிகம். ஆயினும் நாம் புரட்சி மயமான காலத்திலே வாழ்கிறாேம் என்ற உணர்வு வேண்டும். இந்தப் புரட்சியில் கலந்து கொள்ளும் ஆர்வம் குறைவாயுள்ளது. அரசாங்க அதிகார வர்க்கத்திலும்கூட இந்தப் புரட்சியின் துடிப்பைக் காண வேண்டும், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், உழைப்பாளிகள், குடியானவர்கள் யாவரிடத்திலும், ‘வறுமையையும் அறியாமையையும் எதிர்த்து நடத்தும் பெரிய போரின் நடுவே நாம் வாழ்கிறாேம். நம் பங்கினைக் குறைவறக் குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும்’ என்ற உணர்ச்சி வேகம் ஏற்பட வேண்டும். உலகிலே முன்னேறியுள்ள நாடுகளை நாம் விரைவிலே எட்டிப் பிடிக்க வேண்டுமென்ற ஆத்திரம் சமுதாயம் முழுதிலும் பரவவேண்டும். ‘வித்துக் கெடாமல் முளை வராது’ என்று மகாத்மா கூறியது உண்மையிலும் உண்மை. இந்தத் தலைமுறையிலுள்ள நாம் நம்மையே தியாகம் செய்தால்தான் இனி வரும் சந்ததியார்கள் நல்வாழ்வு வாழ முடியும்.

நாட்டிலே சில பகுதிகளில் பிரிவு மனப்பான்மை வளர ஆரம்பித்தது. மொழி, இனம், பிரதேசம் ஆகிய வேற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு, இடையிடையே பாரத ஒருமைப்பாட்டுக்கு இடையூறுகள் உண்டாக்கப்பட்டன. கட்சிகள் பல தோன்றின. இவைகளிலே சிலவற்றில் வகுப்புவாதம் அல்லது சமயவாதமே அடிப்படையாயுள்ளன. தெளிவான

இ. சீ. பா.—6

81