பக்கம்:இந்தியா எங்கே.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இந்தியா எங்கே?


தனது தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக. தமது விலைமதிப்பற்ற உயிரை அர்ப்பணித்தார்களே, சர்தார் பகத்சிங், ராஜகுர, சுகதேவ் இவர்களைப் பற்றி உனக்குத் தெரியுமா தம்பி! இவர்கள் மேடை ஏறி ஜனங்களை பேச்சால் ஏமாற்றியவர்கள் அல்ல! தூக்கு மேடை ஏறி நம் மானம் காத்த மாவீரர்கள்! திருமணக் கயிற்றை அவர்கள் தொட்டுப் பார்த்ததில்லை! தூக்குக் கயிற்றைத்தான் முத்தமிட்டார்கள். கண்டாலே மனம் நடுங்கும் கொடிய லாகூர்க் கோட்டைதான் இந்த இளைஞர்களுக்கேற்ற மாமனார் வீடாக இருந்தது. அதற்காக அவர்கள் என்ன கண்ணிர் வடித்தார்களா? கவிதை பாடினார்களா? பத்திரிகை நடத்தினார்களா? போஸ்டர் போடச் சொன் னார்களா? இல்லை. அப்படி எதுவும் அவர்கள் செய்ய வில்லை. அத்தகைய அற்ப ஆசைகளுக்கெல்லாம் அப்பாற் பட்ட சிங்கங்கள்! “அடல் ஏறுகள் கடல் ஆறுகள்!” என்றெல்லாம் நீட்டி முழக்குவாயே தம்பி! அதற்கு இலக்கணங்களாக வாழ்ந்து காட்டியவர்கள்!

அவர்கள் கடைசியாக என்ன குரல் கொடுத்தார்கள் தெரியுமா? “இனம் வாழ்க" என்றார்களா? ஜனம், ஜாதி, மதம், பட்டம், பதவி, மனை, மக்கள், பணம், பாட்டில், சொத்து, சுகம், கட்டில், காடு, கரை, “இவைகள் வாழ்க’ என்று கதறினார்களா? இல்லை. “இந்த நாடு சுதந்திரமடைய மக்களுக்கொரு மனப் புரட்சி தேவை; அதற்குத் தியாக உரம் தேவை; அந்த உரத்திற்கு எமது உயிர்களே உறுதியான அடித்தளம் அமைக்கட்டும்; எங்கள் தியாகத்தால் இமயம் முதல் குமரிவரை உள்ள எம் நாட்டு இளைஞர்கள் அதிர்ந்து எழுவார்கள். புரட்சி வீரர்களாவார்கள். அந்தப் புரட்சி வாழ்க’ என்று லாகூர் கோட்டையில் அவர்கள் எழுப்பிய இதய ஒலிதான் இந்த நாட்டின் இமய ஒலியாக எங்கும் கேட்டது!

இவர்கள் எதற்காக உயிரை விட்டார்கள்? தின்று கொழுத்துத் திண்ணைச் சோம்பேறிகளாய், உண்டு உறங்கி ஊர் சுற்றும் தலைவர்களாய், கண்டது காட்சியாய்,

இ.எ - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/36&oldid=1401728" இலிருந்து மீள்விக்கப்பட்டது