பக்கம்:இந்தியா எங்கே.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了8 நம் தாய்

வேல் : பசித்தபோது உணவு தராதவர்கள்?

வான் : இரக்கமற்ற கல்நெஞ்சர்கள். -

வேல் : இதை மறக்காமல் நாளை நான் கேட்குமிடத்தில்

திரும்பியும் சொல்லவேண்டும் தெரியுமா?

(காசமுடிவு)

ஒலி - 2

காலம் - பகல்

இடம் பொன்மேனிராயன் மாளிகை

(அன்பு நாட்டிலிருந்து பனித்தீவுக்கு அடிமை வியாபாரம் செய்யும் அதிபதி. பானை வயிறும் பகட்டான ஆடையும் பூண்டு உலகை ஏய்ப்பவன். சதா தன் நாய் வால் மீசையை முறுக்கிக்கொண்டே யிருப்பான். அவன் அளவுக்கு மீறி அலங்கார நடையுடை பாவனைகள் நகைச்சுவைமிக்க கேளிக்கையாயமைய வேண்டும். பலவித கோணலான ஒரு கிரீடம். பலவித நிறத்தாலான மேலுடை. அதேபோல் காலணி, மேனியெங்கும் பொன்னகைகள் மின்னவேண்டும். இவன் வருகைக்காக வீரர்கள் மண்டபத்தில் காத்து நிற்கின்றனர். அவன் பிரதானியான மலைகிள்ளு மாயன் பிரவேசித்து கம்: றுகிறான்) மலை : பராக்ரம்சீல, பரிதாபகால, பரஞானமோன படாடோபமான, பலசாலிவேக, பணசாகரத்தின், ,பொன்மேனி முடிராய மகாபிரபுக்கு.

(அவன் எதிர்பார்த்தவாறு மற்றவர் "ஜே சொல்லாமல் நின்றதைக்கண்டு திகைத்து) அடே! ஏனடா வழக்கம்போல் ஜே சொல்ல. மாட்டேன் என்கிறீர்கள்? காரணம்? - வீரன் ; காரணமா! வழக்கம்போல் கூலி முதலில் வர வேண்டும். இல்லாவிட்டால் சப்தம் எப்படி வரும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/80&oldid=537642" இலிருந்து மீள்விக்கப்பட்டது