பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ற 26. சமயம் சார்ந்த காரியங்களை நிருவகிப்பதற்கான சுதந்திரம் : பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நலவாழ்வு ஆகியவற்றிற்கு உட்பட்டு, ஒவ்வொரு சமயக் கிளையும் அல்லது அதன் பிரிவு எதுவும்(அ) சமய நோக்கங்களுக்காகவும் அற நோக்கங்களுக்காகவும் நிறுவனங்களை நிறுவுவதற்கும் பேணிவருவதற்கும், (ஆ) சமயம் சார்ந்தவற்றில் தனக்குரிய காரியங்களை நிருவகிப்பதற்கும், அசைவியல் சொத்தினையும் நிலையியல் சொத்தினையும் சொந்தமாக வைத்திருப்பதற்கும் ஈட்டுவதற்கும், ஈ) அத்தகைய சொத்தினைச் சட்டத்திற்கிணங்கிய வகையில் ஆண்டு வருவதற்கும் உரிமை உடையது ஆகும். 27. குறிப்பிட்ட சமயம் எதனையும் வளர்ப்பதற்கான வரிகள் செலுத்துவது குறித்த சுதந்திரம் : குறிப்பிட்ட சமயம் அல்லது சமயக் கிளை ஒன்றை வளர்ப்பதற்கோ பேணி வருவதற்கோ ஆகும் செலவுகளைச் செய்வதற்கெனக் குறித்தொதுக்கப்பட்டுள்ள தொகைகளை ஈட்டுவதற்கான வரிகள் எவற்றையும் செலுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்துதல் ஆகாது. H 28. குறித்தசில கல்வி நிறுவனங்களில் சமயப் போதனை பயில வருவது அல்லது சமய வழிபாட்டுக்கு வருகை தருவது குறித்த சுதந்திரம் : (10) முழுவதுமாகவே அரசு நிதியங்களைக்கொண்டு பேணிவரப்படும் கல்வி நிறுவனம் எதிலும் சமயப் போதனை எதனையும் செய்தல் ஆகாது. (2) (0ஆம் கூறிலுள்ள எதுவும், கல்வி நிறுவனம் ஒன்று அரசினால் நிருவகிக்கப்பட்டு வருவதாயினும்கூட, அதில் சமயப் போதனை செய்யப்பட வேண்டும் என்று வேண்டுறுத்துகின்ற நிலைக்கட்டளை அல்லது பொறுப்புக்கட்டளை ஒன்றன்படி அது நிறுவப்பட்டதாயிருப்பின், அத்தகைய நிறுவனத்திற்குப் பொருந்துறுதல் ஆகாது. (3) அரசினால் ஏற்பளிக்கப்பட்டிருக்கிற அல்லது அரசு நிதியங்களிலிருந்து உதவி பெறுகிற கல்வி நிறுவனம் ஒன்றில் பயிலவரும் எவரும், அத்தகைய நிறுவனத்தில் புகட்டப்படும் சமயப் போதனை எதிலும் கலந்துகொள்ள வேண்டுமென்றும், அத்தகைய நிறுவனத்தில் அல்லது அதனுடன் இணைந்த வளாகம் ஒன்றில் நடத்தப்படும் சமய வழிபாடு எதற்கும் வருகைதரவேண்டுமென்றும், அவரோ, அவர் இளவராக இருப்பின், அவருடைய காப்பாளரோ அதற்கு இசைவு அளித்திருந்தாலன்றி, அவரை வேண்டுறுத்துதல் ஆகாது. பண்பாடு, கல்வி பற்றிய உரிமைகள் 29. சிறுபான்மையினர் நலன்களுக்குப் பாதுகாப்பு : (1) இந்திய ஆட்சிநிலவரையில் அல்லது அதன் பகுதி எதிலும் குடியிருந்துவரும் இயக்களில் எப்பிரிவினரும், தமக்கெனத் தனிவேறான மொழி, எழுத்துவடிவம் அல்லது பண்பாடு உடையவராயிருப்பின், அவற்றைப் பேணிக்காக்கும் உரிமை உடையவர் ஆவார். 2) குடிமகன் எவரையும், சமயம், இனம், சாதி, மொழி இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக்கொண்டு, அரசினால் பேணிவரப்படும் அல்லது அரசு நிதியங்களிலிருந்து உதவி பெறும் கல்வி நிறுவனம் எதிலும் சேர்ப்பதற்கு மத்தல் ஆகாது.