பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மேதும்‌, நாடாளுமன்றம்‌, இந்தஅரசமைப்பின்‌ தொடக்கநிலைக்குப்‌ பின்பு, கூடியவிரைவில்‌, (டு ஆம்‌ உட்கூறில்‌ சுட்டப்பட்டுள்ள செயல்களுக்குத்‌ தண்டனையை வகுத்துரைப்பதற்காகச்‌ சட்டங்களை இயற்றுதல்‌ வேண்டும்‌;

(இ இந்த அரசமைப்பின்‌ தொடக்கநிலையை ஒட்டி முன்பு, இந்திய ஆட்சிநிலவரையில்‌ செல்லாற்றலிலுள்ள, (அ) கூறின்‌ () ஆம்‌ உட்கூறில்‌ சுட்டப்பட்டுள்ள பொருட்பாடுகளில்‌ எதனையும்‌ பொறுத்ததான அல்லது அதேகூறின்‌ () ஆம்‌ உட்கூறில்‌ சுட்டப்பட்டுள்ள செயல்‌ எதற்கும்‌ தண்டனை விதிப்பதற்கு வகைசெய்வதான சட்டம்‌ எதுவும்‌, நாடாளுமன்றத்தினால்‌ மாற்றமோ நீக்கறவோ திருத்தமோ செய்யப்படும்‌ வரையில்‌, அதைப்‌ பொறுத்து 372 ஆம்‌ உறுப்பின்படி கூறப்படும்‌ வரையுரைகளுக்கும்‌ அதில்‌ செய்யப்படும்‌ தழுவமைவுகள்‌, மாற்றமைவுகள்‌ எவற்றுக்கும்‌ உட்பட்டு, தொடர்ந்து செல்லாற்றலில்‌ இருந்து வரும்‌.

விளக்கம்‌--இந்த உறுப்பில்‌, “செல்லாற்றலிலுள்ள சட்டம்‌” என்னும்‌ சொற்றொடர்‌, 372

ஆய உறுப்பில்‌ கூறப்பட்டுள்ள அதே பொருளை உடையதாகும்‌.

பகுதி 117 அரசுக்‌ கொள்கையினை நெறிப்படுத்தும்‌ கோட்பாடுகள்‌ 36. பொருள்வரையறை:

இந்தப்‌ பகுதியில்‌, தறுவாயின்‌ தேவை வேறானாலன்றி, “அரசு” என்பது, 111 ஆம்‌ பகுதியில்‌ கூறப்பட்டுள்ள அதே பொருளை உடையதாகும்‌.

37.இந்தப்‌ பகுதியில்‌ அடங்கியுள்ள கோட்பாடுகளைப்‌ பயன்படுத்துதல்‌ :

இந்தப்‌ பகுதியில்‌ அடங்கியுள்ள வகையங்கள்‌ நீதிமன்றம்‌ எதனாலும்‌ செயலுறுத்தப்படுவன அல்ல; ஆயினும்‌, இதில்‌ விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள்‌ நாட்டின்‌ ஆட்சிநெறிக்கு அஷ்படையாக அமையும்‌; மேலும்‌, சட்டங்கள்‌ இயற்றுகையில்‌ இந்தக்‌ கோட்பாடுகளைப்‌ பயன்படுத்துவது அரசின்‌- கடமை ஆகும்‌.

36, மக்கள்‌ நலப்பாட்டை வளர்க்கும்‌ வகையில்‌, சமுதாய முறையமைவினை எய்திடுமாறு அரசு செய்தல்‌ வேண்டும்‌:

(9 அரசு, தேசியவாழ்வின்‌ அமைவனங்கள்‌ அனைத்திலும்‌ சமுதாய, பொருளியல்‌, இரசியல்‌ நீதி நிறைந்து நிலவுவதான ஒரு சமுதாய முறையமைவினைப்‌ பயனுற எய்திப்‌ மதுகாத்து, மக்களின்‌ நலப்பாட்டை வளர்த்திட அரிதின்‌ முயலுதல்‌ வேண்டும்‌.

(2) அரசு, தனிமனிதர்களுக்கு இடையே மட்டுமன்றி வெவ்வேறு பகுதிகளில்‌ வாழ்கின்ற அல்லது வெவ்வேறு வாழ்க்கைத்‌ தொழில்களில்‌ ஈடுபட்டிருக்கின்ற மக்கள்‌ பிரிவினருக்கிடையே, றிப்பாக, வருமானத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு குறைப்பதற்கு அரிதின்‌ முயல்வதோடு, அவர்களிடையே சமுதாயப்படிநிலை, வளவசதிகள்‌, வாய்ப்பு நலன்கள்‌ ஆகியவற்றிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கும்‌ முனைந்து முயலுதல்‌ வேண்டும்‌.

ட ணவ்ப்‌