பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தச் செம்மல்

103


‘சிவன்’ எனவும் வழங்கும். இறைவன் எனக் கடவுளைக் குறிக்கும் சொற்பொருள், இந்த உலகிலுள்ள எல்லா உயிர்கட்கும் உரியது. எந் நாட்டு எத்திறத்து உயிர்கட்கும் உரியவனாகிய இறைவனைத் தென்னாட்டவரான செந்தமிழர் ‘சிவன்’ என வழங்குவர்... சிவம் என்பதன் பொதுப் பொருள் உண்மையை உணர்ந்தே சயினச் சான்றோரும், கிறித்தவச் சான்றோரும் பேரின்ப நிலையைச் ‘சிவகதி’ எனத் தம் நூல்களில் வழங்கி யிருக் கின்றனர். வேற்றுச் சமயத்தவரும் விரும்பிக் காதலித்து மேற்கொண்டொழுகும் வீறு சிறந்தது ‘சிவம்’ எனும் இந்தச் செந்தமிழ்ச் சொல்!”

இவ்வாறு கூறும் உரைவேந்தர், ‘சிவம் -உயிர்- உலகு’ இவற்றிற்கிடையே உளதாகும் தொடர்பை இனிது விளக்குகின்றார்:


“சிவ சம்பந்தம், சைவம், ஆதலால் சிவத்துக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தம்-சைவம்; சிவத் துக்கும் உயிரில்லாத உலகிற்கும் உள்ள தொடர்பு - சைவம்; ஆகவே உயிர்கட்கும் அவ் வுலகிற்கும் உள்ள தொடர்பு சைவமாம். உயிரின் வேறாய் அதற்கு நிலைக்களமாய் விளங்கும் உடம்பு உலகியற் பொருளாய் விடுதலால் உயிர்க்கும் உடம்புக்கும் உளதாகிய தொடர்பும் சைவமாம். உயிர்க்கும் உடம்புக்கும் தொடர்பாவது ‘அன்பு’ என்றார் திருவள்ளுவர் ‘சிவம்’ எனக் கண்டார் திருமூலர் இச் சம்பந்தத்தை அறிந்தொழுகும் திரு நெறி ‘சைவம்’ ஆயிற்று. இதனை அளவைகளாலும், பொருந்தும் நெறியாலும், ஆராய்ந்து தெளிந்து முடிவுகண்டு, அன்பர் பணி செய் தொழுகுவது ‘சைவ சித்தாந்தம்’ எனப் படுவதாயிற்று!”


என்பது உரைவேந்தர் தரும் அரியதோர் விளக்கம்!

சைவசித்தாந்தச் செம்மலாக விளங்கிய உரைவேந்தர், சமயமேடைகள் தோறும் சைவ முழக்கமிட்டார் என்பதோடு, சமய -