பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

115


சிவஞான முனிவர், மறைமலையடிகளார் போன்ற சான்றோர்கள்பால் அளவிறந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் உரைவேந்தர். எனினும் அவர்களுடைய உரையில் தவறு என்று தமக்குத் தெரிந்தால் நயம்பட மறுப்பது உயர் பண்பாகும்.

சிவஞானபோதச் சிற்றுரையில், ஓரிடத்தில், சிவஞான முனிவர், ‘மான் என்பது வடசொல் திரிபு’ என்பார். இதனை உரைவேந்தர் மறுக்கும் திறம் வருமாறு:

“மஹான்’ என்னும் வடசொல், ‘மான்’ எனத் திரிந்தது என்பார். ‘வடசொற் றிரிபு’ என்றார். பெருமையுணர்த்தும் ‘மா’ என்னும் தமிழ்ச்சொல்’ ‘னகர’ வீறு பெற்றுப் ‘பெரியோன்’ என வந்த வகையினை இவ்வுரைகாரர்(முனிவர்) மறந்துபோய் இவ்வாறு கூறுகின்றார்!”

‘சிவஞானபோதம்’ அருளிய மெய்கண்டாரின் தந்தையார் அச்சுதக்களப்பாளர் என்பது முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைக் குறித்துக் கூறவந்த மறைமலையடிகளார்,

“திருவெண்ணெய் நல்லூரில் அந்நாளில் சடையப்ப வள்ளல் என்பார் வாழ்ந்தாராதலின் சிறப்புடைய அவருடைய மகளையே நம் அச்சுதக் களப்பாளர் மணந்து கொண்டார்!”

என்பார்.இதனை உரைவேந்தர்,

“திருவெண்ணெய் நல்லூரில் சடையப்பர் வாழ்ந்த காலம், மெய்கண்டார் காலத்துக்குப் பெரிதும் முற்பட்டதாகலின், அடிகள் கூற்றுப் பொருந்து வதாக இல்லை!”

(சிவஞான போதச் சிற்றுரை-குறிப்புரை)

என்று நயமாக மறுக்கின்றார்!

‘பணியுமாம் என்றும் பெருமை’, ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பன வள்ளுவர் வாய்மொழிகள் உரைவேந்தரிடம், பணிவும் உண்டு; அடக்கமுடைமையும் உண்டு.

தூத்துக்குடி சைவசித்தாந்த சபை, மிகமிகப் பழைமை வாய்ந்தது. தென் தமிழ்நாட்டில் தமிழையும் சைவத்தையும் பரப்புவதில் பெருமை