பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


ஒல்லையூர்

புதுக்கோட்டைத் தனியரசின் கீழ் இருந்த ஊர்களுள் ஒன்று. இப்போது ‘ஒலியமங்கலம்’ என்று பெயர்.

கோட்டம்பலம்

சேரநாட்டு ஊர்களுள் ஒன்று. இக் ‘கோட்டம்பலம்’ இப்போது, ‘அம்பலப்புழை’ என்னும் இடமாகும். கடற்கோட்டில் உள்ள அம்பலம் ஆதலின் இது, ‘கோட்டம்பலம்’ எனப் பண்டை நாளில் பெயர் பெற்றுப் பிற்காலத்தே ‘அம்பலப் புழை’ என மாறிற்றாதல் வேண்டும். இது, சில ஏடுகளில் ‘கூத்தம்பலம்’ எனப் பாடம் வேறுபடுகிறது. சேரநாட்டில் பல கூத்தம்பலங்கள் உள்ளன. திருவாங்கூர் நாட்டு அரிப்பாடு முதலிய இடங்களில் கூத்தம்பலங்கள் இருந்திருக்கின்றன என அந்நாட்டுக் கல்வெட்டறிக்கைகள் (TAS. Vol. VI of 1927 p.35) கூறுகின்றன.

மாறோக்கம்

இது, ‘மாறோகம்’ என்றும் வழங்கும். பாண்டிநாட்டில் கொற்கையைச் சூழ்ந்த பகுதி.

தருமபுரி

முன்பு ‘தகடூர்’

பிரான்மலை

முன்பு ‘பறம்புமலை’.

பூங்குன்றம்

இராமநாதபுர மாவட்டத்திலுள்ள ‘மகிபாலன்ப ட்டி’.

கருங்குழல்

திருநெல்வெலி மாவட்டத்தில் கோட்டைக் கருங்குளம் என்ற ஊரில் ‘ஆதனார்’ என்ற நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். ‘கருங்குள-