பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

77

வாதனார் பெயரை, ஏடெழுதினோர், ‘ளகரத்’ தை, ‘ழகர’ மாக்கி, ‘வகர’த்தை ‘லகரமா’க மாற்றிக் ‘கருங்குழலாதனார்’ என மாற்றி விட்டனர்.

பூந்தமல்லி

இவ்வூர்க்குச் சிலர் ‘பூவிருந்த வல்லி’ எனப் பெயர் குறிப்பர். அதன் பழம் பெயர், ‘பூந்தண் மலி’ என்பது. (கல்வெட்டு: AR.No. 302 of 1938-39)இவ்வாறே, இன்னும் பல ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளால் மெய்ப்பிக்கின்றார் உரைவேந்தர்.

இலக்கணச் சான்று தருதல்

உரைவேந்தர், பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஓதி உணர்ந்த பெரும் புலவராதலின், அப்புலமை நலத்தைத் தாம் எழுதிய உரைநூல்களில் காட்டியுள்ளார். இவண், சில மட்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன:

நும்மனோர்(புறம் 210)

“அன்னோர்” என்பது ‘இடைச்சொல்’ முதனிலையாகப் பிறந்த குறிப்புப் பெயர் என்று சேனாவரையர் முதலியோர் கூறுவர்.

செவிசெஞ்சேவல் (புறம் 238)

எதுகை நோக்கி மொழி மாறி நின்றது. அது, ‘செஞ்செவிச் சேவல்’ என நிற்றற்பாலது என்று தெய்வச் சிலையார்(கிளவியாக்கம்: 25)கூறுவர். இவ்வுரைகாரர், கிடந்த படியே கொள்வர்.

ஒடுங்கி

பெயர். சுமைதாங்கி, முள்வாங்கி என்பவற்றைப் போலும் ‘இகர’ வீற்றுப் பெயர். ஒடுங்கு+இ. ‘இகரம்’ ஒடுக்கத்தைச் செய்யும் வினைமுதற்பொருண்மை உணர்த்தும் விகுதி. இது போலவே ‘அமர்தாங்கி’, ‘புகழ் வேண்டி’ என்று மக்கட்குப் பெயருண்மை கல்வெட்டுக்களால் (S.I. Vol.V.585, 641) தெரிகிறது.

‘சிவஞானபோதச் சிற்றுரை’யில் மாதவச் சிவஞான முனிவர் கூறும் பல்வேறு இலக்கணக் குறிப்புக்களுக்கும் உரைவேந்தர் அடிக்குறிப்பில்