பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

உரைவேந்தர் ஓவை சு. துரைசாமிபிள்ளை


“உணவால் உயிர்களின் பசிப்பிணியும், மருத்துவத்தால் உடற்பிணியும், சிவஞானத்தால் பிறவிப் பிணியும் நீக்கும் இனிய தொண்டினைச் செய்தமையால், இக் ‘கோளகி சந்தானம்’ நாட்டில் நல்ல செல்வாக்கினைப் பெற்றது!”

இவ்வாறு, எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்பத் தமக்கெனத் தனி ‘நடை’ யினைக் கையாள்வதில் வல்லவராக விளங்குகின்றார் உரைவேந்தர்.

இவைதவிர, உவமைகளை எடுத்தாளுதல், அரிய செய்திகளைக் கூறுதல், ஆங்காங்கே வானநூற் புலமை, சோதிடப் புலமை, வடநூற்புலமை முதலாயின வெளிக் காட்டுதல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்; அத்துணை அளவுக்கு நுண்மாண் நுழைபுல மிக்கவராக மாண்பார் உரைவேந்தர் திகழ்கின்றார். இவற்றை யெல்லாம் நோக்க, உரைவேந்தரை ‘நற்றமிழ் நாவலர்’ எனல் சாலுமன்றே!