பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கின்ற நாளேட்டைத் தொடங்கி அண்ணா அவர்கள் அதற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று சில ஆண்டு காலம் அதை நடத்தி அதன் பிறகு வேறு பணிகளின் காரணமாக அண்ணா அதன் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள நான் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய 'மாலைமணி' ஏட்டின் உரிமையாளராகவும், கழக வரலாற் றின் தொகுப்பாளராகவும் விளங்கிய, இறுதிக் காலம் வரையில் லட்சிய முரசு கொட்டிய டி. எம். பார்த்தசாரதி அவர்கள் பெயரால் இந்த அரங்கு! இப்படிப்பட்ட தியாகத் திருவுருவங்களை மதிக்கின்ற வகையில் இந்த மாநாடு அமையப் பெற்று மிகச்சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிலே வழக்கம் போல நீங்கள் என்னி டத்திலே எதிர்பார்ப்பது இன்னும் வசூலைச் சொல்ல வில்லையே என்பதுதான். நான் தொடக்கத்திலேயே சொன்னேன். நேற்று வரவேற்புக்குழுத் தலைவர் மதுராந்தகம் ஆறுமுகம் அவர் கள் வரவேற்புரையாற்றும் போது இந்த மாநாட்டிற்கு செலவு அதிகமாகிவிட்டது என்பதையும், அதே நேரத் தில் ஆடி ஓடி அலைந்து இந்த மாநாட்டிற்கான நிதியினை அவரும் மற்றவர்களும் வசூலிக்க இயலவில்லை என்பதை யும் வேதனையோடு வெளியிட்டார். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை கழகத்திற்கு தேர்தல் நிதியானாலும் என்னுடைய மணிவிழாவின் பேரால் திரட்டப்பட்ட தேர்தல் நிதியானாலும் இந்த இரண்டு நிதிகளுக்கும் பெருந்தொகை வழங்கிய மாவட்டங்களில் ஒன்று அண்ணா மாவட்டம். அந்தக் காரணத்தினால்தான் பல இடங்களுக்குச் சென்று அலைந்து திரிந்து மேலும் மேலும் நிதியினைப்பெற இயலாத சூழல் இந்த மாநாட்டை நடத்தியவர்களுக்கு!