பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 மாநாடுகள் பல இடங்களில் நடைபெற்றன என்றா லும் கூட நுழைவுக் கட்டணமாக தந்து மாநாட்டிற் குள்ளே வந்து அமர்ந்து மாநாட்டை கவனித்துக் கேட்டு கண்டு களித்து உணர்வு பெற்று செல்லுகின்றவர்களின் தொகை கூட இதுவரை நடை பெற்ற மாவட்ட மாநாடு களையெல்லாம் மிஞ்சத்தக்க அளவிற்கு இங்கே இருக் கிறது என்ற கணக்கை நான் உங்களுக்கு வேண்டுமேயானால், சொல்ல மாநாடு நுழைவுக்கட்டணத்தின் மூலம் அதிகமாக வசூலான ஒரே ஒரு மாவட்டம் தஞ்சைமாவட்டம்தான். மன்னிக்க வேண்டும் என்னுடைய தஞ்சை மாவட்டம் தான்! ஆனால் என்னையும் வென்று காட்டிவிட்டது அண்ணா மாவட்டம்! என்ன இருந்தாலும் தஞ்சை மாவட்டம் தம்பி மாவட் டம். இது அண்ணா மாவட்டம் அல்லவா! (பலத்த கை தட்டல்) எனவே நுழைவுக் கட்டண வசூலில் கூட இது வரை யில் முன்னணியில் இருந்த தஞ்சை மாவட்டம்-கோ.சி. மணி அவர்களும் மன்னை அவர்களும் மற்றவர்களும் முன்நின்று நடத்திய அந்த மாநாட்டின் மூலம் கிடைத்த நுழைவுக் கட்டணத்தைவிட மிக அதிக அளவு நுழைவுக் கட்டணம் இந்த மாநாட்டின் மூலமாக கிடைத்திருக் கிறது. - அள எல்லா மாநாடுகளுக்கும் மகளிர்கள் ஏராளமாக வந் திருந்தாலும் கூட மற்ற மாநாடுகளிலே வராத விற்கு, ஏராளமான தாய்மார்கள் இந்த அண்ணா மாவட்ட மாநாட்டிற்குத்தான் வருகை தந்திருக்கிறார்கள்.