பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இவ்வளவுக்கும் பிறகு முதலமைச்சர் "அண்ணா மாவட்டம் என்ற பெயரை 11 எம்.ஜி.ஆர், பொதுமக்கள் நிருபர் யாரும் விரும்பவில்லை. கருணாநிதி ஒருவர்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று நேற்று திருச்சியில் களுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு நான் சொல்லிக் கொள்வேன். இங்கே குழுமியிருக்கின்ற இந்தக் கூட்டத்தை உங் கள் ஒற்றர்கள் மூலமாக நீங்கள் அறிவீர்கள்: அறிந்து கொள்ளவேண்டும். எனக்குக் காவல்துறை நண்பர் களைப் பற்றித் தெரியும். அவர்கள் ஒரு காலத்தில் என்னி டம் பணியாற்றிய காரணத்தால்! ஒரு லட்சம் பேர் எதிர்க்கட்சி கூட்டத்திற்குக் கூடி னால் அதை அப்படியே ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் சொன்னால் கோபிப்பார்களோ என்று பயந்து இருப தாயிரம் பேர் என்று சொல்லுவார்கள். இது காவல்துறை ஒற்றர்கள் ஆற்றுகின்ற வாடிக்கையான பணி. அதைத் தான் நேற்று நடை பெற்ற ஊர்வலமானாலும்-மாநாடு நிகழ்ச்சியானாலும் இன்றைக்கு வெள்ளம் போல குழுமி யிருக்கின்ற இந்தக் கூட்டத்தை பார்த்த பிறகானாலும் போலீஸ் ஒற்றர்கள் எம். ஜி. ஆருக்கு செய்தி தருவார் கள். எம்.ஜி.ஆர். அவர்களே! நீங்கள் போலீஸ் பேச்சைக் கேட்டு ரொம்பக்கெட்டுப் போகிறீர்கள். தயவு செய்து உண்மைகளை அறியுங்கள், கருணாநிதி ஒருவனுக் காக, பேராசிரியர் ஒருவருக்காக, சாதிக் ஒருவருக் காக, அல்லது நாஞ்சிலாருக்காக அண்ணா மாவட்டம் என்ற பெயரை வைக்க முடியுமா என்று கேட்கின்ற முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவர்களே! இங்கே குழுமியிருக்கின்ற கூட்டத்தின் அளவு என்ன? வந்திருப்போர் தொகை எவ்வளவு? எழுச்சி