பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 களில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று இல்லாமல் ‘எழுச்சி-எழில்' இந்த இரண்டும் போதும் என்ற அள வில் மிக எளிமையாகக் காட்சி தருவது எனது இதயத் திற்கு மிக இதமாக இருக்கின்றது. ஒரு எதிர்க்கட்சியினுடைய மாநாடு எப்படி நடை பெற வேண்டும் என்று நான் எண்ணுகின்ற நேரத்தில், நாம் ஆளும் கட்சியாக வந்தாலும் கூட இதே போல் தான் எளிமையாக நடை பெற வேண்டும் என்பதை இப் போதே நான் சொல்லி வைக்கின்றேன். இந்த மாநாட்டில் ஆறுமுகம் அவர்களோடு உடனி ருந்து, மாநாட்டினுடைய செயலாளர்களாக பணி புரிந்த வர்கள், நான் முதலிலே குறிப்பிட்ட என்னுடைய பழம் பெரும் நண்பர், அண்ணாவினுடைய அன்பிற்கு பாத்திர மான சி.வி.எம். அண்ணாமலை அவர்கள். அவரைப் போலவே துடிப்புள்ள இளைஞன், கழகத் திலே பிடிப்புள்ள வாலிபன் அருமைத்தம்பி அகிலன் அவர்கள். அதைப்போலவே எவ்வளவு கோபித்துக் கொண்டாலும் சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொள்ளக் கூடிய மாசற்றமணி, மாசிலாமணி, அதைப் போலவே நூற்றுக்கு நூறு மார்க் எந்தப் பணியிலும் வாங்கிக் காட்டுகின்ற சீயம்தான் இந்த நகரத்தினுடைய செயலாளர் வி. என். மார்க். ய அதைப் போலவே மாவட்டத்தினுடைய பொருளா ளர் எஸ். ஐ.வெங்கட்ராமன். நிதிக் குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் நம் முடைய பூவிருந்தவல்லி சட்டப் பேரவை உறுப்பினர் ராசரத்தினம் அவர்கள். நான் ராசரத்தினத்தை எண்ணு கிற நேரத்திலெல்லாம், அவர் ஊருக்குச் சென்று பேசுகிற நேரத்திலெல்லாம், திருவாவடுதுறை ராசரத்தினத்தையும்