பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 பார்த்து எங்கே கருணாநிதியை அழைத்து வரவில்லையா? என்று அண்ணா கேட்க, இதோ இவன்தான் கருணாநிதி என்று டி. என். இராமன் என்னை சுட்டிக்காட்ட "ஓ! நீ தானா!" என்று அண்ணா ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்து எனக்குச் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? "ஒழுங்காகப் படி, இனிமேல் நீ கட்டுரை எழுதினால் போட மாட்டேன். நன்றாக இருந்தது போட்டேன். ஆனால் அடுத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாய். 'பகுத் தறிவு பரமசிவன்' என்று. அதைப் போட மாட்டேன். காரணம் நீ படிக்க வேண்டும். ஆகவே நன்றாகப் படி!" என்றார் அண்ணா. அண்ணா சொல்லி நான் கேட்காத ஒன்று அதுதான்! 66 அனைத்தையும் கேட்டேன். "அதைக் கேட்காத தால்தான் அண்ணா; நீங்கள் இவ்வளவு விரைவிலேயே எங்கள் மீது கோபித்துக் கொண்டு போய் விட்டீர்களா!" என்று அழத் தோன்றுகிறது எனக்கு! "படி" என்றார். என்னை மட்டுமல்ல - அவரைச் சூழ்ந்துள்ள ள அத்தனைப் பேரையும் படி என்றார். படித்துப் பட்டம் பெற வேண்டுமென்றால், படித்த தன் பயனை, பேராசிரியர் குறிப்பிட்டது போல், தனக் கென ஆக்கிக்கொள்ளாமல் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆக்கிட வேண்டும் என்பதற்காக அன்றைக்கு "படி, படி, படி" என்றார். நான் 'படி' என்பதற்கு பொருள் அவருக்குப் படிந்து நடக்க வேண்டும் என்றுதான் புரிந்து கொண்டேனே யல்லாமல் படிக்க வேண்டுமென்று புரிந்து கொள்ள வில்லை.