________________
21 இதே காஞ்சிபுரத்தில் எளிய வாழ்வு மேற்கொண்டு, ஏற்றம் பெற்ற அண்ணனை நான் 1944-ம் ஆண்டு இறுதி யில், அல்லது 1945-ம் ஆண்டு தொடக்கத்திலே நேரில் வந்து சந்தித்தேன். 'திராவிட இசை விழா' என்று ஒரு விழாவினை இங்கே அண்ணா அவர்களுக்கு நெருங்கியவராக இருந்த டி. பி. எஸ். பொன்னப்பா அவர்கள் நடத்தினார்கள். அந்தத் திராவிட இசை விழாவிலே கலந்து கொள்ள வருவதற்கு அழைப்புக்களைப் பெற்று வந்தவர்களிலே நான் ஒருவன். அந்த இசை விழா நடைபெற்ற நேரத்தில். அண்ணா அவர்கள், என்னையும், முல்லை முத்தையா என்கிற புத்தக வெளியீட்டாளரையும் அழைத்துக் கொண்டு இசை விழா மேடை எதிரே இருக்க, மிக தொலைவிலே அண்ணா அவர்கள் மேலே போட்டிருந்த தனது 'துண்டை’ எடுத்து கீழே விரித்து, அதன் மேல் மூன்று பேரும் உட் காரலாம் என்று சொல்லி, மூன்று பேரும் அந்தத் துண்டிலே மணல் தரையிலே அமர்ந்து இசை விழாவை அன்றைக்கு கேட்டு மகிழ்ந்தோம். ஏன் அந்த இசை விழா? அப்படியொரு தமிழ் இசை விழா நாடெங்கும் நடைபெற்ற நேரம். அந்த தமிழிசை பரவ வேண்டும் என்பதற்காக, இயக்கம் நடைபெற்ற நேரம். தமிழிசை பரவுகிற நேரத்தில் நம்முடைய திராவிட இயக்கக் கொள்கைகளும், அந்த இசையோடு கலந்து பரவிவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தின் அடிப் படையிலேதான் அன்றைக்கு காஞ்சிபுரத்திலே திராவிட இசை விழா ஒரு வார காலம் அண்ணா அவர்களுடைய இ-2