பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 அப்படிப்பட்ட எளிய வாழ்க்கையை மேற்கொண்டு, இன்றைக்கு நாடு புகழும் பேரறிஞராக அண்ணா வளர்ந் திருக்கிறார் என்றால், அவர் வளர்த்த அந்த இயக்கமும், அந்த அளவுக்கு இன்றைக்கு வளர்ந்து இருக்கிறது. அண்ணா அவர்களின் பெயரைச் சொல்லி நாட்டில் ஒரு கட்சி நடைபெறுகிறது. அக்கட்சிக்காரர்கள், அவரது பெயரைப் பயன்படுத்தி அவரது கொள்கை களையே-லட்சியங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார் கள். அதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ப தற்காகத்தான், நம்முடைய ஆட்சிபறிக்கப்பட்ட நிலையி லும், கடும் சோதனைகளும் வேதனைகளும் நம்மைத் தாக்கிய நேரத்திலும் கலங்காமல் நின்று அணிவகுத்து தியாகங்கள் பலவற்றைச் செய்து, தி. மு. கழகத்தை இந்த பத்துப் பன்னிரண்டு ஆண்டுக் காலத்தில் எந்த பகையும் தீண்ட முடியாத பலமான கற்கோட்டையாக ஆக்கிக் காட்டி இருக்கின்றோம். எந்த தனிப்பட்ட ஆற்றலாலும் அல்ல. உங்கள் கரங்கள் தந்த உழைப்பு, உங்கள் நெஞ்சுறுதி, இந்த அடிப்படையில்தான் இந்தக் காரியத்தை எங்களால் காதிக்க முடிந்தது. சா இந்தக் கழகத்தை தடை செய்ய யாரோ புறப்பட்டி ருக்கின்றார்களாம். பேராசிரியர் கூட மிகுந்த ஆத்திரத்தோடு குறிப்பிட் டார். நானும் மாலைப் பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பார்த்தேன். திடுக்கிடவில்லை நான்; அதிர்ச்சியடைய ய வில்லை நான்; ஆத்திரம் கூட ஏற்படவில்லை எனக்கு; சிரிப்புத்தான் வந்தது. என்ன காரணத்தால் சிரிப்பு வந்தது தெரியுமா?