பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 வர்கள் என்ன வாதிட்டார்கள் என்பதை நானும் மறந்து விடவில்லை. நாமும் கழகத்தின் பெயரை மாற்றலாம்; "திராவிட கலாச்சாரக்கழகம்" என்று வைக்கலாம்; தி.மு.க. என்ற பெயரேகூட இருக்கட்டும், "திருக்குறள் முன்னணிக் கழகம்” என்று வைக்கலாம்” அல்லது ‘"அகில இந்திய தி.மு.கழகம்" என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் என்னிடம் யோசனைகள் சொல்லப் பட்டன. அந்த நேரத்திலே எம். ஜி. ஆர். ஓம்மேத்தாவின் பேச்சையும், இந்திராகாந்தி அம்மையாரின் பேச்சையும், படித்துப் பார்த்துவிட்டு, தன்னுடைய கட்சிக்கு "அ.தி. மு.க." என்று இருந்த பெயரை உடனடியாக "அகில இந்திய அண்ணா தி. மு. க." என்று, மாநிலக் கட்சியென் றால் தடை செய்வார்கள் என்று பயந்து போய், பெயரை மாற்றிக் கொண்டார். ஆனால் என்னிடத்திலே வாதமிட்ட கழகத் தலைவர் களிடத்தில் நான் பேசும்போது வாழ்ந்தாலும் தி.மு. கழகத்தோடு வாழ்வோம்; வீழ்ந்தாலும் தி.மு.கழகத் தோடு வீழ்வோம். தடை செய்யப்பட்டால் எங்கள் கொடி அகற்றப்படலாம். எங்கள் கட்டிடங்கள் கைப் பற்றப்படலாம். ஆனால் ஒவ்வொரு கொடி அகற்றப்படு கின்ற நேரத்திலும் ஒரு நூறு பேர், இருநூறுபேர் தி.மு. கழக இளைஞர்களது பிணங்களை மிதித்துக் கொண்டு தான் நீங்கள் அந்தக் கொடி நிழலுக்குள்ளே அணுகிட முடியும். ஆயிரக்கணக்கானோரின் பிணங்களை மிதித்துக் கொண்டுதான் தி.மு.கழகக்கட்டிடத்திற்குள்ளே நீங்கள் நுழைய வேண்டும். என்னுடைய பிணத்தையும், பேராசிரியர் பிணத்தை யும், சாதிக்கின் பிணத்தையும், நாஞ்சில் மனோகரனின்