________________
28 பிணத்தையும், இங்கே வீற்றிருக்கின்ற கழகத்தின் தள நாயகர்களது பிணங்களையும் பார்த்த பிறகுதான் தி.மு.கழகம் என்ற சொல் தமிழகத்திலே அழிக்கப்பட முடியுமே தவிர, அதுவரையில் முடியாது! முடியாது! முடி யாது! என்று நான் மும்முறையும் சொல்லிக் கொள் கிறேன். பேராசிரியர், "நீ ஆண் மகனாக இருந்தால் தடை செய்து பார்" என்று சொன்னாரே, அதற்காகத் தடை செய்கிறேன் என்றால், நான் உனக்குச் சொல்கிறேன். முப்படையையும் வைத்திருந்த இந்திரா காந்திக்கே பயப்படாதவர்கள் நாங்கள். நீங்கள் எப்படையை வைத் திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ― எனவே, இதற்கு நாங்கள் பயந்து அஞ்சி நடுங்கி இருந்துவிடமாட்டோம். தி.மு.கழகம் என்கின்ற எஃகுக் கோட்டை எத்தனை ஆயிரம் பேருடைய ய இரத்தச் சகதியிலே எத்தனைப் பேருடைய எலும்புகளைச் செங்கல்லாக ஆக்கி, எத்தனைப் பேருடைய கபாலங்களை கூரைகளாக வேய்ந்து கட்டப் பட்ட இல்லம் என்பதை இந்த எம்.ஜி.ஆர். மறந்திருக் கக் கூடும். ஏனென்றால், அவர் கஷ்டப்பட்டு தியாகம் செய்து, சிறைக்குச் சென்று விலங்கு மாட்டப்பட்டு விழுப்புண் களை ஏற்று இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் அல்ல. இந்த இயக்கத்தால் லாபம் பெற்றவர்; ஆதாயம் பெற்றவர். எவ்வளவு மனக்குமுறல் இருந்தால் அண்ணா உ ருவாக்கிய கழகம் என்பதை மறந்துவிட்டு 1949 ஆம் ஆண்டு வானத்திலிருந்து மழை நீரும், நம்முடைய கண் களில் இருந்து கண்ணீரும் சொரியச் சொரிய, இரண்டும்