பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 கலந்திட கலந்திட இந்தக் கழகத்தை நம்முடைய தலைவர் அண்ணா, அப்படி போது, திராவிடர் சொன்னார்? இல்லை. கழகத்தை உருவாக்கினோம் உருவாக்கிய அழிப்பேன் என்றா என்ன சொன்னார் தெரியுமா? திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படும் என்று சொன்னார். ஆனால், அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு கட்சி வைத்திருப்பவர் தி. மு. கழகத்தைத்- அண்ணா உருவாக்கிய தி. மு. கழகத்தைத் தடை செய்வேன் என்று எம்.ஜி.ராமச்சந்திரன் சொல்கிறார். எந்த ராமச்சந்திரன் தெரியுமா? "என்னுடைய சிலையை வைக்க தமிழ்நாட்டில் உள்ள வர்களுக்கு அனுமதி கொடுத்தால் அண்ணா சிலையை வைக்க இடமே இருக்காது" என்று மமதையோடு பேசிய ராமச்சந்திரன்தான் தி. மு. கழகத்தைத் தடை செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்து நம்மை மிரட்டி இருக்கிறார். ற அவருடைய உருவத்தை இன்று நாடு உணர்ந்து வருகிறது. அப்படி உணர்ந்து வருகின்ற காட்சியை நான் கலந்து கொள்கின்ற சுற்றுப்பயணங்களிலே கண்டு வருகின்றேன். கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் என்றால்,வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகின்ற கூட்டங்கள்! வரவேற்பு நிகழ்ச்சி என்றால் பெரிய பொதுக் கூட்டத்துக்கு வருகின்ற அளவுக் குக் கூட்டம் வருகின்றது. பொதுக் கூட்டங்கள் என்றால் ஒரு மாவட்ட மாநாட்டுக்குத் திரள்வதை போல கூட்டம் திரள்கிறது. மாவட்ட மாநாடு என்றால் மாநில மாநாடோ என ஐயமுறத்தக்க அளவிற்கு கூட்டம் வரூகிறது.