பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 பிரிந்து சென்றபோது திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஊழல் கட்சி என்றார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்கள் லஞ்ச லாவண்யக்காரர்கள் என்றார். இன்றைக்கு வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பதற்கொப்ப அவருடைய கட்சியிலே அமைச்சராக இருந்த, எஸ்.டி.சோமசுந்தரம் எம். ஜி. ஆர் லஞ்சம் வாங்கு கிறார். ஊழல் செய்கிறார் என்று சொல்கிறார். நாஞ்சிலார் குறிப்பிட்டதைப் போல் எம்.ஜி.ஆர். அலறுகிறார் "என் மீது லஞ்சப்புகாரா? சொல்வதற்கே இது அடுக்குமா?" என்று எஸ். டி. எஸ். சுக்கு எம்.ஜி. ஆர். பதில் என்று மாலை முரசு பத்திரிகை கொட்டை எழுத்திலே செய்தி வெளியிடுகின்றது. எம்.ஜி.ஆர். சொல்லுகிறார் "என்னோடு கூட இருந்த வர்கள் என்னை விட்டுப் போகும் போது, எங்கள் மீது லஞ்ச ஊழல் புகார்களை அள்ளி வீசுகிறார்கள். இது தெய்வத்திற்கே அடுக்காது. இது கோழைத்தனமான செயல். அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரானது. அண்ணாவின் கொள்கைகளைச் சொல்லுபவர்கள், (எஸ். டி.எஸ்.) இங்கே இருக்கிறவரை இருந்து விட்டு, போகும் போது லஞ்ச ஊழல் என்பது அண்ணாவின் முதுகில் குத்துவதாகும். எஸ்.டி. எஸ். என்ற வார்த்தையை எடுத்து விட்டு, எம்.ஜி.ஆர்.என்ற வார்த்தையைப் போட்டு கருணாநிதி 72-ம் ஆண்டு பேசியதாக வைத்துப் பார்த்தால், எம்.ஜி.ஆருக்கு பொருந்துகிறதா? இல்லையா? எஸ்.டி.எஸ். இவர்களைப் பற்றி ஊழல் புகார் சொல்லி விட்டாராம்.